வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல பட்டப்பெயரை பரிந்துரைத்த தொண்டருக்கு அந்த அம்மா நன்றி சொல்ல வேண்டும். சின்னம்மா ‘தியாகி’ ஆகும்போது இந்த அண்ணிக்கு இந்தப்பட்டம் பொருந்தாதா?
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை கண்டித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி மனைவி சவுமியா தலைமையில், சென்னையில் போராட்டம் நடந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.அவரது கைதை கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட, பா.ம.க., சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, 'அண்ணியை விடுதலை செய்ய வேண்டும்' என, கோஷம் எழுப்பினர். இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'அம்மா, அண்ணி அடைமொழியை தான் ஜெயலலிதா, பிரேமலதா எடுத்துக்கிட்டாங்களே... இவங்களுக்கு புதுசா எதையும் தேடாமல், அண்ணின்னு சொன்னா குழப்பம் வராதா...' என, முணுமுணுக்க, மற்றொருவர், 'அவங்க தான், பசுமை தாயகம் என்ற அமைப்போட தலைவராச்சே... சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால், 'பசுமை நாயகி'ன்னு ஒரு பட்டத்தை சூட்ட வேண்டியது தானே...' என, 'கமென்ட்' அடித்து, சிரித்தவாறு நடந்தார்.
நல்ல பட்டப்பெயரை பரிந்துரைத்த தொண்டருக்கு அந்த அம்மா நன்றி சொல்ல வேண்டும். சின்னம்மா ‘தியாகி’ ஆகும்போது இந்த அண்ணிக்கு இந்தப்பட்டம் பொருந்தாதா?