முதல்லயே செஞ்சிருக்கலாமே!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ்.மறைக்குளத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட வந்தார். மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க, ஏராளமான பெண்கள் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதை பார்த்து அமைச்சர் டென்ஷனானார். உடனே, கலெக்டர் சுகபுத்ராவை அலைபேசியில் தொடர்பு கொண்டு, 'சார், மக்கள் சிரமம் இல்லாமல் மனுக்கள் கொடுக்க, தகுந்த இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்' என, 'டோஸ்' விட்டார். சிறிது நேரத்தில், சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்து, அங்கிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மக்களுக்கு சிரமமின்றி முகாமை நடத்த ஏற்பாடு செய்தார். 'அமைச்சர் பேசியதும், கலெக்டர் அலறி அடிச்சிட்டு வந்துட்டாரே...' என, மனு கொடுக்க வந்த ஒருவர் முணுமுணுக்க, அருகில் இருந்தவர், 'இதை முதல்லயே கலெக்டர் செஞ்சிருக்கலாமே...' என்றார்.