உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கலைச்சு விட்டுட்டாரே!

கலைச்சு விட்டுட்டாரே!

துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை ஒட்டி, சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மணலியில் நடந்தது.இதில், கட்சியின் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் பேசிக் கொண்டிருந்தபோது, 'டிவி' சீரியல்களை குறிப்பிட்டு கலகலப்பாக பேசினார்.ஆனால், அவர் பேச்சை முடிக்கும் முன்னரே, கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்கள், சேலைகளை வாங்க மேடையை நோக்கி முண்டியடித்தனர்; இதனால், வேறு வழியின்றி அவர் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதை பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர், 'நாம தலைக்கு, 100, 200 ரூபாய் கொடுத்து, இலவசமா புடவையும் கொடுத்து கூட்டத்துக்கு ஆள் சேர்த்தா, இவர் சும்மா இல்லாம சீரியல்களை ஞாபகப்படுத்தி, கூட்டத்தை கலைச்சு விட்டுட்டாரே...' என முணுமுணுக்க, அருகில் இருந்த நிர்வாகி ஆமோதித்து தலையாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜன 03, 2025 05:29

அதானே நாங்கள் ஆர்வமாக, உணர்ச்சி மிகுந்து பார்க்கும் சீரியலைப்பற்றி பேசினால் தாங்குமா? இத்தனை நேரம் பெருந்தன்மையாக மிஸ் பண்ணினோமே , போதும் என்று கிளம்பிவிட்டனர்


சமீபத்திய செய்தி