பேச்சு, பேட்டி, அறிக்கை
தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி பேட்டி: என் தந்தை கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அவர் ஒரு போராளியாக எதிர்கொண்டார்; அந்த தருணம் தான், என் அரசியல் நுழைவாக அமைந்தது. அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதும், மாநில அரசியலுக்கு நான் வருவதையும்தி.மு.க.,வும், முதல்வர் ஸ்டாலினும் தான் முடிவு செய்வர்.இவர் மாநில அரசியலுக்கு வரலாம்னு கனவு வேணும்னா காணலாம்!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன்திருப்பதி அறிக்கை: பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசிய உதயநிதி மீதான கோபத்தை விட, பழனிசாமியை, 'தற்குறி' என்ற தமிழ் சொல்லால் விமர்சித்த அண்ணாமலை மீது அ.தி.மு.க.,வினருக்கு பொங்கும் கோபத்திற்கு காரணம், தமிழக அரசியலில்அண்ணாமலையின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியால் அ.தி.மு.க., அடையும் வீழ்ச்சி.அது சரி... உதயநிதி, பழனிசாமி தயவில் எம்.எல்.ஏ., ஆகலையே... ஆனால், பா.ஜ.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்களும் அ.தி.மு.க., கூட்டணியால் தானே ஜெயிச்சிருக்காங்க!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'நான் முதல்வராக இருந்தபோது வசித்த வீடு, எனக்கு ராசியான வீடு; அதையே எனக்கு ஒதுக்க வேண்டும்'என, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பழனிசாமி வைத்த முதல் கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டது. அடுத்து, 'ஊழல் வழக்குகளை கிடப்பில் போட வேண்டும்' என்ற வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. இப்படி பழனிசாமியை தி.மு.க., ஆட்சி பொத்தி பாதுகாப்பதும், அவரது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதும் எதற்காக?எப்படியாவது பழனிசாமிக்கும்,தி.மு.க.,வுக்கும் சிண்டு முடிய பார்க்கிறார்... அதுக்கு வாய்ப்பில்லாம அண்ணாமலை, 'ரவுண்டு' கட்டுறாரே!தென்காசி மாவட்ட தி.மு.க., முன்னாள் செயலர்சிவபத்மநாபன் பேச்சு:'பழைய குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும்' என, விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவை வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் வழங்கியுள்ளோம். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட அருவி என்பதால், எந்த நிலையிலும் வனத்துறைக்கு மாற்றக்கூடாது என்பது விவசாயிகள், சுற்றுலா பயணியர் விருப்பம்.அவங்க விருப்பம் இருக்கட்டும்... ஆளுங்கட்சி ஒரு விஷயத்தை செய்தால், அதன் பின்னணியில் வேறு யார் விருப்பமாவது இருக்குமே!