பேச்சு, பேட்டி, அறிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி:ஏழு ஆண்டுகளாக, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, விலை உயர்ந்த படகுகளை பறிமுதல் செய்கிறது. மீனவர்களை சிறையில் மொட்டையடித்து சித்ரவதை செய்கிறது. தமிழக மீனவர்கள் அச்சத்தில் மீன்பிடிக்க செல்லாமல் முடங்கி உள்ளனர். ரஷ்யா - உக்ரைன் இடையே சமரசம் செய்வதாக கூறும் மோடி, இலங்கை அரசை கட்டுப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க முடியாதா?பிரச்னையை தீர்த்துட்டா, தமிழக எதிர்க்கட்சிகள் எதை வைத்து அரசியல் செய்யும்னு நினைச்சு சும்மா இருக்காரோ, என்னமோ? தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: 'ஜி.எஸ்.டி.,குறித்த தொழில் முனைவோரின் நியாயமானகோரிக்கைகளை, நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று' என, முதல்வர் கூறியுள்ளார். அவர் கோவை வந்து, தொழில் துறையினர் குறைகளை கேட்டது தவறு என்கிறாரா முதல்வர்?அதில் என்ன சந்தேகம்... அவங்க ஆட்சியில் இருக்கிற இடத்துல, நீங்க நேரடியா குறை கேட்டா, குற்றம் கண்டுபிடிக்க தானே செய்வாங்க!அ.ம.மு.க., பொதுச்செயலர்தினகரன் அறிக்கை: கன்னியாகுமரியில் அணு கனிம சுரங்கங்கள் அமைக்கும் முடிவை, மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், கடற்கரையோடு, கடல் பகுதி வளமும் பெருமளவு பாதிக்கப்படும். அணு கனிம சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக, அக்., 1ல் நடக்க உள்ள கருத்துக் கேட்பு கூட்டத்தை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். மீண்டும் ஒரு கூடங்குளம்போராட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிடுவாங்க போலிருக்கே!இந்திய தேசிய லீக் கட்சியின்மாநில தலைவர் பஷீர் அகமதுஅறிக்கை: 'தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்குஅமல்படுத்தப்படும்; மாதந்தோறும் மின் கட்டணம்' போன்ற தேர்தல் வாக்குறுதியை முதல்வர் எப்போது நிறைவேற்ற போகிறார். தன் மகன் உதயநிதிக்கு துணை முதல்வர் முடி சூட்டும் மும்முரத்தில் மறந்து விட்டாரா? வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும். இல்லையென்றால் தேசிய லீக் கட்சி போராட்டத்தில் ஈடுபடும்.சரியா போச்சு போங்க... மின் கட்டணத்தை மீண்டும் ஏத்தாம இருந்தா போதாதா?