உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி: கல்லுாரிகளில் பேராசிரியர் காலி பணியிடங்கள் தொடர்பான குறைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள் குறித்து அனைவருக்கும் தெரியும். சுயமரியாதையை இழக்காமல், மாநிலத்தின் தன்மையை கட்டிக் காக்கும்வகையில், துணைவேந்தர் நியமனபணிகள் நடந்து வருகின்றன.துணைவேந்தர்கள் நியமனத்தில், கவர்னரிடம் வெள்ளை கொடி காட்டிட்டீங்க என்பது தெளிவா தெரியுது! தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம்அறிக்கை: வி.சி., மது ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், 'நாம் ஒவ்வொருவரும், 10 பேரிடம் குடிக்க வேண்டாம் என சொன்னால், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை' என்றார். தமிழகத்தில் மது ஆலைகள் நடத்தும் தி.மு.க.,வினர், 10 பேரிடம், 'மதுபானம் தயாரிக்கவேண்டாம்; ஆலையை இழுத்து மூடுங்கள்' என, சொன்னால் தான் என்ன?போகாத ஊருக்கு தான் தி.மு.க.,வினர் எப்பவும் வழி சொல்வாங்கன்னு இவருக்கு தெரியாதா?அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி அறிக்கை: தமிழகம்முழுதும் காய்ச்சல் அதிகரித்துவரும் நிலையில், முகாம்கள் நடத்துதல், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் தடுப்பது, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கொசு மருந்து அடிப்பது என, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுகாதாரத் துறை அமைச்சர் அலட்சியமாக இருப்பது, வேதனை அளிப்பதாக மக்கள்குற்றம் சாட்டியுள்ளனர்.ஒரு மாவட்ட மருத்துவமனையில் இருந்து இன்னொரு மாவட்ட மருத்துவமனைக்கு மாரத்தான் ஓட சொல்லுங்க, ஓடுவார்... இதெல்லாம் எப்படி?எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க தலைவர் லியாகத் அலிகான் அறிக்கை: 'அ.தி.மு.க.,வில்இருந்த முதியோர் பலர் காலமாகி விட்டனர்; இளைஞர்கள் பலர் அமைதியாகி விட்டனர். அதனால், 15 சதவீதம் ஓட்டுகள் சரிவடைந்து விட்டன. கட்சிக்கு புதிய இளைஞர்களை சேர்த்து, 2026ல் ஆட்சியை பிடிக்க வேண்டும்' என, பழனிசாமி முனைப்பு காட்டுவது சிரிப்பை தான் வரவழைக்கிறது. சசிகலா, பன்னீர்செல்வம், தினகரனை ஒற்றுமைப்படுத்த மறுக்கிறார். கையில் உள்ள வெண்ணெயை எறிந்து விட்டு, நெய்க்காக அலைகிறார்.சசிகலா, பன்னீர், தினகரன் அடங்கிய, 'இளைஞர் படை'யே அ.தி.மு.க.,வுக்கு போதும்னு சொல்றாரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை