வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜையும் கமலஹாசனையும் ஒரே மேடையில் பேச வைக்கணும் ..
மேலும் செய்திகள்
தமிழக வெற்றிக் கழகம் சறுக்குமா... சாதிக்குமா?
29-Oct-2024
இப்ப இல்லை... 2026ல் வராதுன்னு என்ன நிச்சயம்?நடிகை ராதிகா பேட்டி: நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். மக்கள் பணி செய்வதற்காக முன்வந்திருப்பதை வரவேற்கிறேன். அவரது முடிவு வித்தியாசமானது.அவரது கட்சி கொடி, மங்களகரமான கொடி. பா.ஜ.,வை தாக்கி பேச யோசிப்பார். அவரது அரசியல் கண்ணோட்டமும், பார்வையும் வேறு.கொஞ்சம் அவசரப்படாம இருந்திருந்தால், இவங்க கணவர் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியை, விஜய் கட்சியுடன் இணைத்திருக்கலாம்!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோ,கருணாநிதியோ, கட்சி வெற்றிக்காக வியூக வகுப்பாளர்களையோ அல்லது கூலிக்கு ஆள் வைத்து கூவும் வாடகை ஆட்களை கொண்டோ, வாழ்ந்தவர்களோ, வளர்ந்தவர்களோ கிடையாது. பணம் தந்துதன்னை புகழாரம் செய்ய வைத்து ஒருவன் மகிழ்கிறான்என்றால், அவனை விட ஒரு பைத்தியக்காரன் இருக்க முடியாது.இவரது தலைவர் பன்னீர்செல்வம், சரியான வியூக வகுப்பாளர் இல்லாம தானே, திக்குதெரியாம தவிச்சிட்டு இருக்காரு!எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க தலைவர் லியாகத் அலிகான் பேச்சு: கடந்த 2014ல், 'மோடியா, லேடியா?' என்று சவால் விட்டு, 38 எம்.பி.,க்களை பெற்று தந்த ஜெயலலிதா பெயரில் கட்சி நடத்தும் தினகரன், 'வரும் சட்டசபை தேர்தலில், பழனிசாமி முதல்வராக முடியாது' என்கிறார். ஆனால், '2026ல் தே.ஜ., கூட்டணி சார்பில், தமிழகத்தில்ஆட்சி அமைப்போம்' எனக் கூறுகிறார். இது, மதவாதத்தை உள்ளே விடும் செயல் அல்லவா? இதை தடுக்க, திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவளித்து, சமூக நீதிக்கு பாடுபடுவோம்.எங்க ஆதரவில்லாம,திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையாதுன்னு சொல்றாரோ?தமிழக முன்னேற்ற காங்கிரஸ்நிறுவன தலைவர் அருள்தாஸ் பேட்டி: நடிகர் விஜய் உச்ச நடிகர் என்பதால், அவருக்கு மக்கள் கூட்டம் கூடும்; அதுஓட்டாக மாறாது. எம்.ஜி.ஆர்.,முதல்வராக இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பேசும் கூட்டங்களில் தான் அதிக கூட்டம் இருக்கும். கருணாநிதி கூட, 'எனக்கு கூட்டம் வருகிறதே தவிர, ஓட்டு வரவில்லையே...' என்பார். மக்களுக்கு தேவை இருக்கும்போது, எதிர்பார்ப்பு இருக்கும்போது, கட்சி துவங்கினால், மக்களிடம் வரவேற்பு கிடைத்து, ஓட்டு வாங்கி, ஆட்சியை பிடிக்க முடியும். இப்போது அப்படி ஒரு சூழல் இல்லை.
பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜையும் கமலஹாசனையும் ஒரே மேடையில் பேச வைக்கணும் ..
29-Oct-2024