உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி: தி.மு.க., ஆட்சியை, மன்னர் ஆட்சி என விஜய் விமர்சிப்பது, அவரின் தனிப்பட்ட முடிவு. இதற்கான விடை, தமிழக மக்களிடம் உள்ளது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., மைனஸ் ஆகும் என அவர் சொல்வதெல்லாம் நடக்காத ஒன்று. அதை, நாம் அனைவரும் பார்க்கத் தான் போகிறோம்.

தேர்தலில், தி.மு.க., மைனஸ் ஆகும் என அவர் சொல்வதெல்லாம் நடக்காத ஒன்று. அதை, நாம் அனைவரும் பார்க்கத் தான் போகிறோம்.

மறுபடியும் மந்திரி ஆகணும் என்ற கனவில் இருப்பவர்கள் தான், இப்படி அசைக்க முடியாத நம்பிக்கையில் இருப்பாங்க! த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: கர்நாடக அரசு, காவிரிநதி நீர் ஆணைய உத்தரவின்படி முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவில்லை. தமிழக டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் மேகதாதுஅணை திட்டத்தை, கர்நாடக காங்., அரசு உடனடியாக கைவிட வேண்டும். தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள முல்லை பெரியாறு அணையை, தமிழகஅரசு பராமரிக்க தேவையான வழிகளை கேரள அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.இந்த கோரிக்கைகளை எல்லாம்,இவர் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய பா.ஜ., அரசிடம்முன்வைத்து நிறைவேற்றலாமே!பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் பேச்சு: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டசபை நடத்தப்படும். எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகள்நிறைவேற்றப்படும்' என,தெரிவிக்கப்பட்டது. ஆனால்,இரு தினங்கள் மட்டுமே சட்டசபை கூட்டப்படுகிறது. இதன்பராமரிப்பு பணிக்கென, 3 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.இரு நாட்களில் எந்த தொகுதிக்கான பிரச்னையையும்,மக்களின் பொதுவான கோரிக்கைகளையும் முன்வைக்க முடியாது.எம்.எல்.ஏ.,க்களுக்கு அளித்த வாக்குறுதியையே நிறைவேற்றாதஅரசு, மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு மட்டும் நிறைவேற்றுமா என்ன?தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர் செல்வம்பேட்டி: முதல்வர் ஸ்டாலின்,அரசு ஊழியர்களுக்கு, '100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்' என, உத்தரவாதம் அளித்தார்; இதுவரை நிறைவேற்றவில்லை.வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றாது என்ற மனநிலைக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் வந்து விட்டனர்.முதல்வரை எட்டு முறை சந்தித்து பேசி வலியுறுத்திஉள்ளோம். அதன் பிறகும் நிறைவேறாததால், போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.போராட்டம் நடத்தாமல், எந்த அரசும் பணியாது என்பதை இப்ப தான் இவங்க புரிஞ்சிக்கிட்டாங்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை