உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., துணை தலைவர் ராமலிங்கம் பேட்டி: சட்ட சபையில் அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு பதில் அளிக்காமல், அவரை போல், 'மிமிக்ரி'செய்து நடித்து காட்டி எள்ளி நகையாடியது,சபையின் ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லஇது கண்டிக்கத்தக்கது. இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய முதல்வர், அந்நிகழ்வை ரசித்துள்ளார்.

அந்நிகழ்வை ரசித்துள்ளார்.

ஆட்சி மாறினால், 'ரிவெஞ்ச்' எடுக்க அந்த கட்சியிலும்ஜெயகுமார், செல்லுார் ராஜுன்னு நிறைய பேர் இருக்காங்க, விடுங்க! தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: தமிழகசட்டசபையில் பேசிய முதல்வர்,'சுரங்க ஏலம் தொடர்பான சட்ட திருத்தத்துக்கு எதிராக, லோக்சபாவில் நாங்கள் குரல் கொடுத்தோம்; பா.ஜ.,வினருக்குமெஜாரிட்டி இருப்பதால் நிறைவேற்றி விட்டனர். நாங்கள் என்ன செய்ய முடியும்?' என கூறினார். சில நாட்களுக்கு முன், 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் கொடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைகூறியபோது, அமைச்சர் பொன்முடி, 'அண்ணாமலை பேச வேண்டிய இடத்தில் பேசி, நிதி வாங்கி கொடுத்தால்நன்றாக இருக்கும்' என்று கூறினார். மொத்தத்தில்,'தி.மு.க., உறுப்பினர்களை சட்டசபைக்கும், லோக்சபாவுக்கும் அனுப்புவதில் எந்த பலனும் இல்லை' என, ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.அதெல்லாம் சரி... இப்படி தமிழகத்திற்கு தொடர்ந்து ஓரவஞ்சனை செஞ்சுட்டே இருந்தா,பா.ஜ., இங்க காலுான்றுவது கஷ்டம் தான்!த.மா.கா., பொதுச் செயலர் யுவராஜா பேச்சு: ஆளுங்கட்சியோடு இருக்கும் கூட்டணி கட்சிகள், ஆட்சியாளர்கள் செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மன்னராட்சி பற்றி பேசும் ஆதவ் அர்ஜுனாவிற்கு, தமிழகத்தில் மன்னராட்சியைகொண்டு வருவதற்கு துணையாக இருந்தது தங்கள் கட்சி தலைவர் தான் என்பது தெரியாதா?வாஸ்தவம் தான்... 'இனியும்அது தொடரக்கூடாது'ன்னு தானேஆதவ் சொல்றார்?நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: தமிழக குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் கள், 15 ஆண்டுகளாக பணியாற்றியும், தமிழக அரசு அவர்களை இதுவரை பணி நிரந்தரப்படுத்தாமலும், உரிய ஊதியம் வழங்காமலும் அவர்களின் உழைப்பை உறிஞ்சி வருவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமை.இப்படி கணக்கெடுத்து துறை வாரியாக அறிக்கை விட்டா, ஒரு வருஷத்துக்கு தொடர்ந்து அறிக்கை விடலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை