உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: மக்கள் பிரச்னையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து அமித் ஷாபேசி உள்ளார். அயோத்தியில் கடவுள் பெயரை கூறித்தான் போட்டியிட்டீர்கள். ஆனால், அங்கு அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் வெற்றி பெற்றார்.

பேசி உள்ளார். அயோத்தியில் கடவுள் பெயரை கூறித்தான் போட்டியிட்டீர்கள். ஆனால், அங்கு அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் வெற்றி பெற்றார்.

அம்பேத்கர் பிரச்னையை திசைதிருப்ப தான், எம்.பி.,க்கள் மோதல் என்ற புது பிரச்னையை உருவாக்கியாச்சே! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:மருத்துவ துறையில் அதிக கவனம் செலுத்துவதாக விளம்பரப்படுத்தி கொள்ளும் தி.மு.க., அரசுக்கு, 'நீட்' ரத்து விவகாரத்தில் தோல்வி. புதிய மருத்துவ கல்லுாரிகளை துவக்குவதில் தோல்வி. மருத்துவ துறையில் கர்நாடகாவோடு போட்டி போடும் வகையில், முதல் இடத்திலிருந்த தமிழகம், தற்போது மூன்றாம் இடத்திற்குதள்ளப்பட்டுள்ளது. அதிலும்,உத்தர பிரதேசத்திற்கு பின்னால்தள்ளப்பட்ட நிலையில் இருப்பதில் இருந்தே தி.மு.க., அரசின் அக்கறையின்மை, இயலாமை வெளிச்சத்திற்கு வந்து விட்டது.உத்தர பிரதேசத்திற்கு மத்திய அரசு நிதியை வாரி வழங்குதே... அவங்க முன்னுக்கு வராம என்ன செய்வாங்க?அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், சாதாரண குடியிருப்புகள் துவங்கி, கோவில்கள்,போலீஸ் நிலையங்கள், திரையரங்குகள், அரசியல் கட்சி அலுவலகங்கள், கவர்னர் மாளிகை என, பெட்ரோல் குண்டுவீச்சு நடக்காத இடங்களே இல்லைஎன்று கூறும் அளவுக்கு, தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் தலைவிரித்தாடுகிறது.திருநெல்வேலியில் பெட்ரோல்குண்டு வீசி தாக்குதல் நடத்தியநபர்களை கண்டறிந்து,கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.பெட்ரோல் குண்டுவீச்சால பெரிய அளவில் அசம்பாவிதங்கள்நடந்தால் தான், நம்ம போலீசார் துாக்கம் கலையுமோ?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஐ.பி.எஸ்.,அண்ணாமலை வழிநடத்தும் பா.ஜ.,வின் தேசிய ஜனநாயககூட்டணிக்கு, எதிர்காலம் உண்டுஎன நம்பி, பல கட்சிகளும்அதில் சேருகின்றன. ஆனால்,பழனிசாமி நடத்துகிற அ.தி.மு.க.,வுக்கு வருங்காலம்வறண்ட காலம் என்பதால், ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரமறுக்கின்றனர். ஆக, தலைமை மாறினால் மட்டுமேஇந்த நிலைமை மாறும்.தமிழகத்தில் பா.ஜ., கூட்டணிக்குவரிசை கட்டுற கட்சிகள் பட்டியலைசொல்லுங்க பார்ப்போம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
டிச 21, 2024 10:46

இது நாள் வரை தமிழகத்துற்குக் கொடுத்த நிதி எங்கே போனது? முதலில் அந்த 4000 கோடிக்குக் கணக்கை ஆசிரியர் சொல்வாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை