பேச்சு, பேட்டி, அறிக்கை
மருது அழகுராஜ் அறிக்கை:
த.வெ.க., தலைவர் விஜய், தன் கொள்கை வழிகாட்டி ஈ.வெ.ரா., என அறிவித்த உடனே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தன் கொள்கை வழிகாட்டி என்று, ஈ.வெ.ரா.,வை வைத்து கதாகாலட்சேபம் செய்து வந்த நாம் தமிழர் கட்சி சீமான், ஈ.வெ.ரா.,வை எதிரி என்கிறார் என்றால், சீமான் எதிர்ப்பது ஈ.வெ.ரா.,வையா அல்லது தன் அரசியல் பிழைப்பை கபளீகரம் செய்ய களத்திற்கு வந்திருக்கும் விஜயையா?விஜய், இன்னும் ஒரு தேர்தல் களத்தை கூட சந்திக்கல... அதற்குள், சீமானின் அரசியலை அவர் கபளீகரம் செய்துடுவார்னு இவர் எப்படி கணிக்கிறார்? அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசு மருத்துவமனையில் நடந்த இந்த கொடூர சம்பவம், தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.தமிழகத்தை தவிர, மற்ற மாநிலங்களில் எல்லாம் பாலியல் குற்றங்களே நடக்கலைன்னு சொல்றாரா?தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், வாக்காளர்கள் மனம் வருத்தப்படுவது எங்களுக்கு புரிகிறது. அ.தி.மு.க.,வும், நாங்களும் நிற்காததால், வாக்காளர்களுக்கான பண பட்டுவாடா, மிகவும் குறைவாகத் தான் இருக்கும்.இடைத்தேர்தலில் பணத்தை குறைக்க காரணமாக இருந்த எதிர்க்கட்சிகளை, ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் 2026ல் மன்னிப்பரா?தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: சமத்துவ பொங்கல் என்ற பெயரில் நெருப்பு இல்லாத அடுப்பு, அரிசி, தண்ணீர், வெல்லம் இல்லாமல் பானைக்கு முன் பொங்கல் வைப்பது போல் போட்டோவுக்கு, துணை முதல்வர் உதயநிதி போஸ் கொடுக்கிறார். அவரது அருகில் பர்தா அணிந்த முஸ்லிம் பெண், சிலுவை அணிந்த கிறிஸ்துவ சகோதரி இருக்கிறார். எந்த அடையாளமும் இல்லாமல் ஹிந்து பெண் காட்சி அளிக்கிறார். வெறும் பானைக்கு முன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சமத்துவம் பேசுவது தான் தி.மு.க., மாடல் ஆட்சியா? இவ்வளவு உன்னிப்பா உதயநிதியை கண்காணிச்சதால, இவர் வீட்டுல பொங்கல் வச்சாரான்னு தெரியலையே!