உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி: பல்வேறு வரிகளால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். லைசென்ஸ் உரிம கட்டணம், வணிக கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. வணிகர்களுக்கு விடுதலை வேண்டும் என்ற நோக்கில், வணிகர் தினமான மே 5ல், மதுராந்தகத்தில் வணிகர்கள் உரிமை முழக்க மாநாடு நடக்கவுள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்; மாநாட்டில் முதல்வர் பல்வேறு சலுகைகள் அறிவிப்பார் என, எதிர்பார்க்கிறோம்.

சலுகைகள் அறிவிப்பார் என, எதிர்பார்க்கிறோம்.

'சலுகைகள் அறிவிக்கலை என்றால், அடுத்த வருஷம் வணிகர் தினத்தின்போது, முதல்வர் எதிர்க்கட்சி தலைவராகிடுவார்'னு அரசு ஊழியர்கள் பாணியில் எச்சரிக்க வேண்டியது தானே! துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு: மத்திய பா.ஜ., ஆட்சியில், தமிழகத்துக்கான நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக் கொண்டே வருகின்றனர். தமிழகத்திற்கு கல்விக்கு கிடைக்க வேண்டிய, 2,000 கோடி ரூபாய்க்கு மேலான நிதி, ஹிந்தி பயில ஒப்புக் கொள்ளாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'தி.மு.க., பிரமுகர்கள் நடத்தும் பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்க மாட்டோம்' என்று பகிரங்கமாக சொல்வாங்களா?பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தின் இப்போதைய மின்தேவை, 18,600 மெகாவாட். ஆனால், அனல்மின் நிலையங்களின் உற்பத்தித் திறன் வெறும், 4,320 மெகாவாட் மட்டுமே. தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை ஏற்க முடியாது. நிலுவையில் உள்ள அனல்மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக, தமிழகத்தை உருவாக்க வேண்டும்.மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்று விட்டால், தனியார் நிறுவனங்களின் மின்சாரத்தை யார் வாங்குவது?தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி: டாக்டர் அம்பேத்கர் எழுதிய சட்டத்தில், கவர்னர் அதிகாரம் குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் கவர்னர் மீறியுள்ளார் என்பதுதான் தமிழக அரசின் வாதம். இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும்; நியாயம் கிடைக்கும். கவர்னருக்கும், இவங்களுக்கும் நடக்கிற ஆடுபுலி ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்டுவது நல்லாவே தெரியுது! இந்த ஆட்டத்தில், யார் வெற்றி பெறப் போகின்றனர் என்பது, 'த்ரில்லிங்'கான விஷயம் தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை