உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 23

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 23

காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தமிழக துணை தலைவர் ரவிராஜ் பேட்டி: 'காங்கிரசில் விஜய் சேர முடியாமல், சில தலைவர்கள் சனியன் மாதிரி தடுத்து விட்டனர்' என, காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றஞ் சாட்டியுள்ளர். அவரது குற்றச்சாட்டுக்கு, தங்கபாலு விளக்கம் சொல்லியிருக்கிறார். அதாவது, 'விஜய்க்காக, என் மாநிலத் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருந்தேன்' என, குறிப்பிட்டுள்ளார். அன்றைய டில்லி மேலிடத் தலைவர் குலாம்நபி ஆசாத்தை தான் மாணிக்கம் தாகூர் சொல் லியுள்ளார் என்பது தான் உண்மை. எது எப்படியோ... காங்., கட்சியில் விஜய் சேர்ந்திருந்தால், இன்று தமிழகத்தில் அக்கட்சி தான் ஆளுங்கட்சியா இருந்திருக்கும்... அதை கெடுத்துட்டாங்க! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: த.வெ.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு மோசம்; சிறுமி காணாமல் போன சம்பவத்தில் கூட துப்பு துலக்கக்கூட வக்கில்லாமல் காவல் துறை உள்ளது. நகை கடையில் கொள்ளை நடக்கிறது. உலகத்திலேயே நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாத ஒரே முதல்வர் விஜய் தான். அ.தி.மு.க., ஆட்சியில், துாத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்து 13 பேர் பலியானதை, 'டிவியில் பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்'னு, அப்ப முதல்வரா இருந்த பழனிசாமி சொன்னதை நீங்க மறந்துட்டீங்களோ? அரூர் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பேச்சு: முதல்வர் விஜயின் சாதனை என்ன; தமிழக மக்களுக்கு, ஹிந்தி எதிர்ப்புக்கு போராடியவரா? கல்லுாரி மாணவர்களுக்காக போராடி சிறை சென்றவரா; என்ன தியாகம் செய்தார்? ஒரு நடிகர் சினிமாவில் நடிக்கிறார். மாற்றம் தேவை என்பதற்காக மக்கள் ஓட்டு போட்டனர். அதன் விளைவு, மக்கள் மாட்டிக் கொண்டனர். மக்கள் மாட்டிக்கல... நீங்க தான், த.வெ.க., எழுச்சியால பலத்த அடி வாங்கி, எழ முடியாம தவிக்கிறீங்க!பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு: 'முதலீட்டாளர்கள் மாநாடு, வரும் 25ம் தேதி நடக்கிறது' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்திற்கு வரவிருந்த முதலீடுகள் ஆந்திர மாநிலத்தை நோக்கி செல்வது ஏன்? தமிழகத்தில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களை தக்க வைத்துக்கொள்ள, அரசு மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விகளுக்கு, முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும்.உங்க கூட்டணி நண்பரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, மத்திய பா.ஜ., அரசு பக்கபலமா இருப்பதால், முதலீடுகளை வாரி குவிக்கிறாரு... தமிழகத்துக்கும் மத்திய அரசின் கருணை பார்வை கிடைக்க, நீங்கநடவடிக்கை எடுக்கலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !