உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என கருணாநிதி முழங்கினார். ஆனால், தற்போது மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என, தி.மு.க., மாறி விட்டது. மக்கள் ஆட்சியை, தன்னுடைய மக்கள் ஆட்சியாக மாற்றி விட்டனர் தி.மு.க.,வினர். தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க., ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, தமிழில் அரசாணை என கூறுகிறது. இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தனர். தேர்தல் வரும்போது தான் தி.மு.க.,வுக்கு தமிழ், தமிழர்கள் மீதெல்லாம் பற்றும், பாசமும் பொங்கிட்டு வரும்! இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: தன் கோரிக்கையால், 100 நாள் வேலை திட்ட தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்; அவரது முயற்சிக்கு பாராட்டுகள். அதுபோல, 'நீட்' விலக்கு, தேசிய கல்வி கொள்கை கல்வி நிதி உட்பட தமிழக பிரச்னைகளிலும் மத்திய அரசை அவர் வலியுறுத்த வேண்டும்.எல்லாத்தையும் எதிர்க்கட்சித் தலைவரே செய்துட்டால், ஆளுங்கட்சி எதற்கு இருக்காம்?கரூர் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யும், தமிழர் நட்பகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் முருகேஷ் அறிக்கை: நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, ஆன்மிக பெரியவர்களை நம் கண் முன்னே நிறுத்திய பெருமை, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மட்டுமே உண்டு. அவர் சினிமாவில் மட்டும் நடித்தார்; நிஜ வாழ்வில் கள்ளம், கபடம் இல்லாத, நேர்மையான மனிதராக வெள்ளை ரோஜாவாக வாழ்ந்தார். அவரது சிலையை திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி.வெள்ளை ரோஜா உள்ளத்துடன் இருந்ததால் தான், சிவாஜி கணேசனால் அரசியல்ல ஜொலிக்க முடியலை.கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அறிக்கை: தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய, தமிழ் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தியாகு என்பவர், 'பயங்கரவாதிகளின் தாக்குதலையும் கண்டிக்கிறோம். பாகிஸ்தான் தாக்குதலையும் கண்டிக்கிறோம். இந்திய அரசின் தாக்குதலையும் கண்டிக்கிறோம்' என்று, பயங்கரவாதிகளின் தாக்குதலை யும், இந்திய ராணுவத்தின் தாக்குதலையும் ஒன்றுபோல ஒற்றுமைப்படுத்தி பேசியிருக்கிறார். இது, கடும் கண்டனத்திற்குரியது. எதுவும் நடக்காதது போல தி.மு.க., அரசு வேடிக்கை பார்க்காமல், தியாகு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்ற ஒருத்தர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இவரை போல மேலும் பலர் கிளம்புவர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ