உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி: தி.மு.க., என்ற விஷ விதை, ஆலவிருட்சமாக வளர்ந்து கொண்டிருப்பதை அகற்ற வேண்டுமென்றால், பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் இணைந்தால் தான் முடியும் என்ற மக்கள் விருப்பத்தை, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பூர்த்தி செய்துள்ளார். இந்த பயத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., மத்தியில் பிரச்னை இருப்பதாக, தி.மு.க., அவதுாறு பரப்பி வருகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால் தி.மு.க., பயந்தாலும், பா.ஜ., மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியதுல, அவங்களுக்கு சந்தோஷம் தான்! அ.தி.மு.க., மகளிரணி செயலர் வளர்மதி பேச்சு: அரக்கோணத்தில், கல்லுாரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து துன்புறுத்திய, தி.மு.க., பிரமுகர் தெய்வசெயலுக்கு அக்கட்சி தலைமை ஆதரவாக இருக்கிறது. இப்படி குற்றச்செயல்களில் ஈடுபடும் தி.மு.க.,வினரை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தி.மு.க., ஆட்சியில் நீதி கிடைச்ச மாதிரி, அரக்கோணம் குற்றவாளிக்கு உங்க ஆட்சியில் தான் தண்டனை வாங்கி தரணும்! வி.சி., கட்சி தலைவர் திருமா வளவன் பேட்டி: புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கோவில் பிரச்னையில் தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து, உயர் நீதிமன்ற அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகே, கலெக்டர் அந்த பகுதிக்கு சென்றுள்ளார். இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக சந்தித்து, அவர்களுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு உரிய வழிகாட்டுதல்களை முதல்வர் வழங்க வேண்டும்.'இப்பிரச்னையில் முதல்வர் சரியாக செயல்படலை; இனியாவது சரியாக செயல்படணும்'னு நாசுக்கா குத்தி காட்டுறாரோ? தமிழக பா.ஜ., இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேச்சு: 'ஆப்பரேஷன் சிந்துார்' சம்பந்தமாக நம் பாதுகாப்பு படையினரின் வீரத்தை, உலகமே வியந்து பாராட்டுகிறது. தி.மு.க., - காங்., உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கொள்கைகளை தாண்டி இந்திய நாட்டிற்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் உறுதுணையாக நிற்க வேண்டும். ஆனால், தி.மு.க., - காங்., தலைமையில் இருக்கும் சிலர், நம் பாதுகாப்பு வீரர்களின் மன உறுதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகின்றனர்.அட, ராகுலே, 'நம்ம நாட்டிற்கு சொந்தமான எத்தனை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன' என, ஏடாகூடமா கேட்டுட்டு இருக்காரே... தலைவர் எவ்வழி; தொண்டர்கள் அவ்வழி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை