வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முறையான படிப்போ, உலக நடப்புகளைப் புரிந்து கொள்வோ முடியாதோர் என்ன அதனை நடந்தாலும் சீந்துவோரில்லாமல் பலரின் பகடிப் பேச்சுக்களைத்தான் ஏற்பர்
தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பேச்சு: அ.தி.மு.க., ஆட்சியில் தொழில் முனைவோர் திட்டம் முடங்கியிருந்தது. தி.மு.க., ஆட்சியில், தொழில் முனைவோர் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், 55,000 தொழில் முனைவோரை மட்டுமே உருவாக்கினர். கடந்த நான்கு ஆண்டில், 2021 கோடி ரூபாய் மானியம்; 5,150 கோடி ரூபாய் வங்கி கடனுதவி வழங்கி, 59,574 இளைஞர்களை தொழில் முனைவோராக உருவாக்கி உள்ளோம்.பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்... அதேநேரம், அவங்க வாங்கிய வங்கி கடனை முறையா கட்டுறாங்களா என்றும் கண்காணிக்கணும்! அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'மாநிலங்கள் நிதியை போராடி பெறுவது, கூட்டாட்சிக்கு அழகல்ல' என டில்லியில் நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், உயிர்காக்கும் மருத்துவர்களை வருட கணக்கில் இங்கு போராட வைப்பது நியாயமா? அதுவும், 'தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும்' என உறுதியளித்துவிட்டு, நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் சொன்னதை செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.டாக்டர்களுக்கு மட்டுமா செய்யலை... அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்னு பெரிய பட்டியலே இருக்கே!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: அரசு போக்குவரத்து கழகத்தில் ஏற்படும் நஷ்டத்தை காரணம் காட்டி, பண்டிகை காலங்களிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும், போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய, பணப்பலன்களை வழங்க மறுப்பது, கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோரிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.தி.மு.க., அரசு மீதான அதிருப்தியாளர்கள் பட்டியல்ல, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் சேர்ந்துடுவாங்க போலிருக்கே!மதுரை தொகுதி மா.கம்யூ., -எம்.பி., வெங்கடேசன் பேட்டி: மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், மக்களின் தேவைகள், தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள், வளர்ச்சியை மையப்படுத்தியும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுதும் ஜூன் 11 முதல் 21 வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வர்.இவங்க நடைபயணத்தை முடிக்கிற ஜூன் 21ல், மக்களின் எல்லா பிரச்னைகளும் பட்டுன்னு தீர்ந்துடும்!
முறையான படிப்போ, உலக நடப்புகளைப் புரிந்து கொள்வோ முடியாதோர் என்ன அதனை நடந்தாலும் சீந்துவோரில்லாமல் பலரின் பகடிப் பேச்சுக்களைத்தான் ஏற்பர்