உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேட்டி: தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் ஜூலை 15ல் நடக்கிறது. மாநிலம் முழுதும் 10,000 இடங்களில் முகாம் நடக்கிறது. விடுபட்டவர்கள், தகுதியுள்ள பெண்கள் முகாமில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 15ல் பெறக்கூடிய மகளிர் உரிமைத்தொகை மனுக்களுக்கு அக்டோபருக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அக்டோபர்ல மகளிர் உரிமைத்தொகை தந்தால்தான், ஏப்ரல்ல வர்ற சட்டசபை தேர்தல்ல தி.மு.க.,வுக்கு அனுகூலமா இருக்கும்னு திட்டமிட்டு அட்டவணை போடுவது தெளிவாகவே தெரியுது! தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி: அ.தி.மு.க., அமித் ஷாவுக்கு கட்டுப்பட்ட கட்சியாக மாறிவிட்டது. அதனால்தான், திராவிட இயக்கத் தலைவர்கள், ஈ.வெ.ரா.,வை விமர்சிக்கும் மேடையில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்போதும் திராவிட இயக்கத்தினர் என்று சொல்லிக் கொள்பவர்கள், இந்த சம்பவம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. இது, மெல்ல மெல்ல அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாறி வருவதை காட்டுகிறது.இவங்க கூட்டணி கட்சிகள் எல்லாம், தி.மு.க.,வின் கிளை கழகங்கள் மாதிரி செயல்படுவதை மறந்துட்டாரோ?தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: எந்த குவாரி உரிமையாளர்களையும் கட்டாயப்படுத்தி வசூல் செய்யவில்லை. அப்படி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தான் வரி போடப்பட்டுள்ளதே தவிர, வேறு எந்த கட்டணமும் கூடுதலாக யாரிடமும் வசூலிக்கவில்லை. ஆதாரம் இருந்து, கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.-துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை இவர்கிட்ட கைமாறியும், பஞ்சாயத்துகள் மாறலையே!தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பேட்டி: கருணாநிதி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட, கவர்னர் காலதாமதம் செய்வதாக, தமிழக முதல்வர் கூறியுள்ளார். நானும், உயர்கல்வித் துறை செயலரும், கவர்னரை சந்திக்க நேரம் கேட்டும், அவர் அழைக்கவில்லை. 'கருணாநிதி பல்கலைக்கழக விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்' என முதல்வர் பேசியதன் அர்த்தத்தை கவர்னர் புரிந்து, அனுமதி வழங்குவார் அல்லது பேச அழைப்பார்.'கவர்னர் அனுமதி வழங்க வில்லை என்றால், நேரா உச்ச நீதிமன்றம் போயிடுவோம்'னு சொல்லாம சொல்றாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை