உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி: தி.மு.க., அரசு சிறுபான்மையினருக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது. ஆதலால், சிறுபான் மையினர் யாரும் நடிகர் விஜய் கட்சி பக்கம் செல்ல வாய்ப்பில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முரண்பாடுகள் மிகுந்தது என்பதற்கு அமித் ஷா, பழனிசாமி பேச்சுகள் எடுத்துக்காட்டாக உள்ளன. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது, மக்கள் இதுவரை விரும்பாத பார்முலாவாக உள்ளது. -மக்கள் விரும்புறாங்களோ, இல்லையோ... 'தனியாகவே சாப்பிடணும்' என, நினைக்கும் ரெண்டு திராவிட கட்சிகள் தான் விரும்பலை! தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் அறிக்கை: 'படிப்படியாக பகுதி நேர ஆசிரியர் களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன' என, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் சொல்வதால், முதல்வர் கொடுத்த பணி நிரந்தரம் என்ற வாக்குறுதி கேள்விக்குள்ளாகிறது. கண் ணீர் விடும் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கையை முதல்வர் கேட்க வேண்டும். நிதி இல்லை என, இனியும் நீதி மறுக்கக் கூடாது. தமிழகத்தில் உள்ள, 12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, வாழ்வாதா ரத்துக் கான விடியலை முதல்வர் தர வேண்டும். 'விடியல் அரசு' என பெருமை அடித்துக்கொள்வோர், பகுதி நேர ஆசிரியர்களின் விடியலை பற்றி சிந்திக்காதது ஏனோ? அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: கடந்த, 2024ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். பிரதமராக மீண்டும் 3வது முறையாக மோடி வந்தால் தான் நாட்டிற்கு நன்மை என்ற எண்ணத்தில் நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்தோம். ஜெயலலிதா வின் தொண்டர்கள் ஒரே குடையின் கீழ் இருந்தால் தான் தி.மு.க.,வை வீழ்த்த முடியும். மத்திய அமைச்சர் அமித் ஷா, 2024ல் அமைந்த கூட்டணியை வலுப்படுத்தி வருகிறார். அது சரி... 2024ல் இணைந்த இவங்களை விட, 2025ல் இணைந்த பழனிசாமிக்கு தான் அங்க, 'மவுசு' அதிகம் தெரியுமா? தென் சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வி.என்.ரவி பேச்சு: அ.தி.மு.க., ஆட்சியில், ஏழை பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு, 4 கிராம் தங்கம், 25,000 ரூபாய் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை, 2011ல் ஜெயலலிதா துவக்கி வைத்தார். பழனிசாமி ஆட்சியில், 8 கிராம் தங்கம், 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கினார். ஆனால், தி.மு.க., ஆட்சியில் அனைத்து திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. 'அடுத்து, தாலியுடன், பட்டுப்புடவையும் சேர்த்து தருவோம்'னு பழனிசாமி சொல்லிட்டாரே... மகளிர் ஓட்டுகள் மொத்தமும் உங்களுக்கு தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை