மேலும் செய்திகள்
ஆட்சியில் பங்கு; கட்சி தலைமை முடிவு செய்யும்'
03-Sep-2025
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை: அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என உண்மையாகவே பா.ஜ., விரும்பினால், 'தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்ட அனைவரையும் கட்சியில் சேர்க்கவும். தே.மு.தி.க.,வை உள்ளே கொண்டு வரவும்' என, பழனிசாமிக்கு உத்தரவு போடும். ஆனால், பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ., திட்டமல்ல; அவரை வைத்தே அ.தி.மு.க., கதையை முடிப்பது தான், பா.ஜ., திட்டம். இவர் சொல்ற தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா வந்துட்டா மட்டும் அ.தி.மு.க.,வுக்கு ராட்சத பலம் கிடைச்சிடுமா என்ன? தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேட்டி: தமிழகத்தில், 20 ஆண்டுகளாக தி.மு.க., - காங்., நல்லுறவு நீடிக்கிறது. பஞ்., முதல் லோக்சபா தேர்தல் வரை வெற்றி கிட்டியுள்ளது. ஆட்சியில் பங்கு தொடர்பாக, கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் கருத்து கூற உரிமையில்லை. விருப்பங்களை கட்சி தலைமையிடம் சொல்லலாம். கொள்கை முடிவுகளை தலைமை தான் அறிவிக்கும். ஆனா, 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க., - காங்., கூட்டணி தோல்வி அடைந்ததும், 'கூடா நட்பு கேடாய் முடிந்தது'ன்னு முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னதை இவர் மறந்துட்டாரோ? பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: 'அடுத்த இரு ஆண்டுகளில், தகுதி தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். 50 வயதை கடந்தவர்களால், நடப்பு பாடத்திட்டத்தின்படி ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது மிகவும் சவாலானது. அவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணியில் நீடிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதாவது, 'ஒப்புக்கு சப்பாணியா' ஒரு தேர்வை நடத்தி, அவங்க பணியை நீட்டிக்கச் சொல்றாரு... ஆனா, அந்த ஆசிரியர்களிடம் படிக்கிற மாணவர்களின் கதியை யோசிக்க மாட்டேங்கிறாரே! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: வான சாஸ்திரத்தையும், காலத்தையும், தங்களின் ஞானத்தால் கணித்தவர்கள் நம் முன்னோர். அறிவியல் வளர்ச்சிக்கு பின் விமானம், ராக்கெட் உருவானது. தொலைநோக்கு சிந்தனையோடு, இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக, நம் முன்னோர் புஷ்பக விமானத்தையும், வைகுண்டத்தையும், புராண இதிகாசங்கள் வழியாக எடுத்து சொல்லி இருப்பதை, நாம் பெருமையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவற்றை இழிவுபடுத்துவது, நம்மை நாமே கேவலப்படுத்தும் செயலாகிவிடும். பா.ஜ., கூட்டணியில் சேர்ந்துட்ட தால, அந்த கட்சியினர் மாதிரியே பேச துவங்கிட்டாரே!
03-Sep-2025