வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பள்ளிப் படிப்பாவது முடித்திருப்பின் நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் மற்றும் சாலைகள் எப்படி அமைக்கப்படுகின்றன என்பது புரியும்
சாலையோரம் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் ஒருவர், என்னிடம், 'தி.மு.க., ஆட்சியில் தினமும் போலீசுக்கு, 500 ரூபாய், கவுன்சிலருக்கு, 500 ரூபாய் என, மாதந்தோறும், 30,000 ரூபாய் கப்பம் கட்டி வந்தேன்; என்றைக்கு விஜய் ஆட்சி அமைந்ததோ, அன்று முதல் மாதம், 30,000 ரூபாயை சேமிக்கிறேன்' என்றார். கப்பம், மாமூல், 'கட்டிங்' போன்ற வசூல் வேட்டைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரியே, மாதம், 30,000 ரூபாயை சேமிக்கிறார் என்றால், பெரும் தொழிலதிபர்கள் எவ்வளவு பணத்தை மிச்சப்படுத்துவாங்க... காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை:
நெடுஞ்சாலைகள் என்பது, சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் வழிகளாக மாறி விட்டன. நெடுஞ்சாலைகளையே, தான் கண்டுபிடித்தது போல் எப்போதும் தற்பெருமை பேசும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நெடுஞ்சாலைத் துறை ஹீரோ என தனக்குத் தானே தம்பட்டம் அடித்து, மகிழ்ச்சி அடைகிறார். நான்கு மாதங்களில், மூன்றாவது முறையாக சுங்கக் கட்டணத்தை உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும். சுங்கக் கட்டணத்தை அடிக்கடி அதிகரிப்பது, விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்பது மத்திய அமைச்சருக்கு தெரியாதா? த.மா.கா., பொதுச்செயலர் வெங்கடேஷ் பேச்சு:
தமிழகத்துக்கான காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட, கர்நாடக அரசுடன் இணக்கமாக பேச்சு நடத்த உள்ள தமிழக முதல்வர் விஜயை, ஏற்கனவே வாசன் பாராட்டி விட்டார். வரும் உள்ளாட்சித் தேர்தலில், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது வாசனின் விருப்பம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தொண்டர்களும் விரும்புவதால், விரைவில் இருவரும் சந்தித்துப் பேசுவர். கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தையே தனி அறையில் இவர் நடத்திட்டு, நிறைய தொண்டர்கள் இருப்பது போல, 'பில்டப்' தேவையா? பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் பேட்டி:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கள் இறக்கும் பனைத் தொழிலாளியின் குடிசைக்கு நேரில் சென்று, அவரது குடும்பத்துடன் பேசி, கள் குடித்து பனைத் தொழிலாளியை உற்சாகப்படுத்தினார். அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியில், கள் இறக்கி விற்க அனுமதி வழங்கியிருப்பது போல், தமிழகத்திலும், கள்ளுக்கு முதல்வர் விஜய் அனுமதி வழங்க வேண்டும். கள்ளுக்கு பக்கத்து மாநிலங்களை உதாரணம் காட்டும் இவர், 'பூரண மதுவிலக்கு வேணும்'னு, குஜராத், பீஹார் மாநிலங்களை உதாரணம் காட்டலாமே!
பள்ளிப் படிப்பாவது முடித்திருப்பின் நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் மற்றும் சாலைகள் எப்படி அமைக்கப்படுகின்றன என்பது புரியும்