உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

அரசு டாக்டர்களின் சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி, 2024ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கு, வரும் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, முந்தைய தி.மு.க., அரசின் நிலைப்பாட்டை மாற்றி, அரசு மருத்துவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை த.வெ.க., அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். மருத்துவம் படிச்சிருக்கும் அருண்ராஜ், உங்க துறைக்கு அமைச்சராகி இருப்பதால், உங்க கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை தருவார்னு நம்பலாம்!காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை: உத்தரகண்டில், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய இடம் சுத்தம் செய்யப்பட்ட விவகாரம், பா.ஜ.,வின் அவமதிப்பு கலாசாரத்தின் வெளிப்பாடாக உள்ளது; இது கண்டிக்கத்தக்கது. மிகவும் எளிய பின்னணியில் இருந்து வந்து, எண்ணற்ற சமூக தடைகளை தகர்த்து, இந்திய அரசியலின் உயர்நிலையை எட்டிய தலைவர் கார்கே. அவர் மீதான தலித் விரோத போக்கை வெளிப்படுத்தும் பா.ஜ.,வின் இந்த செயல், மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கார்கே அவமதிக்கப்பட்டது தப்பு என்பதில் மாற்று கருத்தே இல்லை... அதேநேரம், அந்த தலித் தலைவருக்கு உங்க கட்சியில் முழு அதிகாரத்தையும் சோனியா குடும்பம் தந்திருக்கா? அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ அறிக்கை: கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும், இலங்கை கடற்படையின் அத்துமீறல் எல்லை மீறி செல்கிறது. இலங்கை துாதரக அதிகாரிகளுடன் மத்திய அரசு உடனே பேச்சு நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் அலை கூட ஓய்ந்தாலும் ஓயும் போலிருக்கு... நம்ம மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது போலிருக்கே! பா.ஜ., விவசாய அணியின், தமிழக தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு: தமிழகத்தை ஆளும் விஜய் அரசு, 'நீட்' தேர்வு, வெளிநாட்டு நன்கொடை சட்டத்திருத்த மசோதா, தொகுதி மறுசீரமைப்பு என, நாட்டை மேம்படுத்தும் பல முக்கிய மசோதாக்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது, ஓட்டு வங்கி அரசியலுக்காக, சில வாக்காளர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்திற்காக செய்வதாகவே கருத வேண்டியுள்ளது. 'இந்த தீர்மானங்களால் துளியும் பிரயோஜனம் இல்லை'ன்னு நல்லா தெரிஞ்சும், உங்க கட்சி தவிர எல்லா கட்சிகளும் விழுந்து விழுந்து ஆதரிச்சிருக்கே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ