உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

வாய்க்கால் அடைப்பால் கொசு தொல்லை

புதுச்சேரி, கொக்குபார்க் பகுதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்குவதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது.பாலு, புதுச்சேரி.

எரியாத ஹைமாஸ் விளக்கு

பாக்கமுடையான்பேட், ஏர்போர்ட் மெயின் ரோட்டில், ஹைமாஸ் விளக்குகள் எரியவில்லை.ஆசியாகுமார், பாக்கமுடையான்பேட்.

சாலை சீரமைக்கப்படுமா?

அரியாங்குப்பம், இந்திரா நகர், 4வது மற்றும் 5வது தெருவில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.இருசப்பன், அரியாங்குப்பம்.

பாராக மாறும் கோவில் வளாகம்

கரிக்கலாம்பாக்கம் கன்னிமார் கோவில் வளாகத்தில், சிலர் மது குடிப்பதால், பக்தர்கள், பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ரமணி, கரிக்கலாம்பாக்கம்.

நாய்கள் தொல்லையால் தவிப்பு

அரியாங்குப்பம் சொர்ணா நகரில், நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.மதி, அரியாங்குப்பம்.

சுற்றி திரியும் மாடுகளால் விபத்து

லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில், மாடுகள் சுற்றி திரிவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.கவிதா, லாஸ்பேட்டை.

போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுமா?

முதலியார்பேட்டை ரயில்வே கேட் மூடி, திறக்கும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.கவியரசு, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை