உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

தெரு விளக்கு எரியுமா?

உருளையன்பேட்டை, காமராஜர் நகர் பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.வரதன், உருளையன்பேட்டை.

நாய்கள் தொல்லை

தவளக்குப்பம் லலிதா நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், அப்பகுதி மக்கள்அச்சமடைந்து வருகின்றனர்.ராமன், தவளக்குப்பம்.

வாய்க்கால் துார் வாரப்படுமா?

திலாசுப்பேட்டை, கனகன் ஏரி சாலையோர வாய்க்கால் துார் வாராமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.மதி, திலாசுபேட்டை.

காந்தி வீதியில் ஆக்கிரமிப்பு

காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகஇருப்பதால், நகராட்சியினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.மாணிக்கம், புதுச்சேரி.

சுற்றுலாப் பயணிகள் அச்சம்

கடற்கரை சாலையில் நாய்கள் அதிகமாகசுற்றி திரிவதால் சுற்றுலா பயணிகள்அச்சமடைந்து வருகின்றனர்.கதிர், புதுச்சேரி.

போக்குவரத்து நெரிசல்

அண்ணாசாலையில், சாலையோரத்தில்வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.ரவி, அண்ணாசாலை.

நாய்கள் தொல்லை

அரியாங்குப்பம் கோட்டைமேடு, பகுதியில்நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால்,பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றர்.மதி, அரியாங்குப்பம்.

கொசுக்கள் உற்பத்தி

ரெட்டியார்பாளையம் பொன் நகரில், சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்களின்உற்பத்தி அதிகமாக உள்ளது.மோகன்ராஜ், ரெட்டியார்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை