மேலும் செய்திகள்
புகார் பெட்டி..
24-May-2025
நிழற்குடை இல்லாமல் பயணிகள் அவதிமண்ணாடிப்பட்டில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.செல்லம்மாள், மண்ணாடிப்பட்டு.சாலையில் கழிவுநீர் தேக்கம் காமராஜர் நகர் தொகுதி, சாரம் முத்துரங்க செட்டி நகர் 4வது குறுக்கு தெருவில், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.ஜான், சாரம்.குண்டும் குழியுமான சாலைதொண்டமாநத்தம் முதல் கரசூர் வரை சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.கருணாகரன், வில்லியனுார்.நாய்கள் தொல்லைரெட்டியார்பாளையம் அன்னை பெரியநாயகி நகர் முதல் குறுக்கு தெருவில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.சரவணன், ரெட்டியார்பாளையம்.குறைவான குடிநீர் விநியோகம் கரிக்கலாம்பாக்கத்தில் காலை நேரங்களில் குறைவான அழுத்தத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதே போல மதியம் நேரத்தில், முற்றிலுமாக குடிநீர் நிறுத்தம் செய்வதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.ஜானகி, கரிக்கலாம்பாக்கம்.
24-May-2025