உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

சாலையில் குப்பைகள்

முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் பேட்டை 2வது குறுக்கு தெருவில், குப்பை வண்டிகள் சரியாக வராமல் இருப்பதால் குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கிறது.ஆனந்த், முத்தியால்பேட்டை.

போக்குவரத்து நெரிசல்

வீராம்பட்டினம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கதிவரன், வீராம்பட்டினம்.

ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை

பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவு நேரத்தில் டவுன் பஸ் இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.அருண், புதுச்சேரி.

சாலையில் மது குடிக்கும் குடிமகன்கள்

தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகரில், சாலையில் மது குடிப்பதால் மக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.சரவணன், தட்டாஞ்சாவடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை