உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

மழைநீர் தேங்கி மக்கள் தவிப்பு தவளக்குப்பம் அரவிந்தர் நகரில், மழைநீர் வடியாமல் இருப்பதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பாஸ்கர், அரவிந்தர் நகர். மின் விளக்கு எரியுமா? அரும்பார்த்தபுரம் பைபாசில், தெரு விளக்கு எரியாமல் இரவில் அப்பகுதி இருண்டு கிடக்கிறது. பாண்டியன், வில்லியனுார். வாகன ஓட்டிகள் அவதி லாஸ்பேட்டை மகாவீர் நகர் 5வது, மெயின் ரோடு பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கவுரி, லாஸ்பேட்டை. நாய்கள் தொல்லை மூலக்குளம் மோதிலால் நகர், 3வது குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அருண்குமார், மூலக்குளம். பகலில் எரியும் மின் விளக்கு உழவர்கரை, டீச்சர்ஸ் காலனியில், தெரு விளக்கு இரவு, பகலாக எரிந்து கொண்டிருக்கிறது. லதா, உழவர்கரை. வாய்க்கால் சிலாப் சேதம் வாணரப்பேட்டை, ஜெயமூர்த்தி மாரியம்மன் கோவில், முதல் குறுக்கு தெருவில், கழிவுநீர் செல்லும் வாய்க்கால் சிமென்ட் சிலாப் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பாலசுப்ரமணியன், வாணரப்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை