புகார் பெட்டி புதுச்சேரி
குண்டும் குழியுமான சாலை பூமியான்பேட்டையில் சாலை, குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். நடராஜன், பூமியான்பேட்டை. பயணியர் நிழற்குடை தேவை அபிேஷகப்பாக்கத்தில், பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதியடைகின்றனர். தட்சிணாமூர்த்தி, அபிேஷகப்பாக்கம். மெகா பள்ளத்தால் விபத்து நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில், மெகா சைஸ் பள்ளங்கள் இருப்பதால், விபத்து ஏற்பட்டு வருகிறது. கதிரேசன், நோணாங்குப்பம். போக்குவரத்து நெரிசல் உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதியடைகின்றனர். பாரதிதாசன், உப்பளம். கொக்குபார்க் சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செல்வன், கொக்குபார்க்.