புகார் பெட்டி
சாலையில் குப்பை லாஸ்பேட்டை, காமராஜர் மணி மண்டம் அருகில் குப்பை தொட்டியில் இருந்து குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கிறது. ராஜ்குமார், லாஸ்பேட்டை. குண்டும் குழியுமான சாலை கூடப்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய சாலை, குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அய்யனார், வில்லியனுார். குப்பைகள் தேக்கம் கேண்டீன் தெருவில், குப்பை வண்டி சரியாக வராமல் உள்ளதால், குப்பைகள் தேங்கியுள்ளது. காந்தி, புதுச்சேரி. உயரமான மேன்ேஹால் வில்லியனுார் சாலையில், கழிவுநீர் செல்லும், மேன்ேஹால் உயரமாக இருப்பதால், வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. வேலன், புதுச்சேரி. தெரு நாய்களால் தொல்லை நைனார்மண்டபம் தென்னஞ்சாலை வீதியில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால், வாகனத்தில் செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். சத்யன், நைனார்மண்டபம். மேம்பாலத்தில் விளக்கு எரியவில்லை ௧௦௦ அடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. மதிவேந்தன், அரியாங்குப்பம்.