மேலும் செய்திகள்
புகார் பெட்டி
02-Jan-2026
சாலையில் மீன் கடை உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசலில் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மணி, உப்பளம். கொசு தொல்லை புதுச்சேரி வி.வி.பி., நகர் செல்லும் பகுதியில் கொசு தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். முரளி, புதுச்சேரி. ஆக்கிரமிப்பால் நெரிசல் மேம்பாலம் அருகே சாலை ஆக்கிரமிப்புஅதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கதிரேசன், புதுச்சேரி. போக்குவரத்து இடையூறு வீராம்பட்டினம் சாலையில், வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சிவராஜ், வீராம்பட்டினம். பயணியர் நிழற்குடை தேவை மரப்பாலத்தில் நிழற்குடை இல்லாமல், பொதுமக்கள் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர். மணிவண்ணன், புதுச்சேரி. லாரிகளால் நெரிசல் வள்ளலார் சாலை 45வது ரோட்டில், லாரிகளை நிறுத்தி லோடுகள் இறக்கி வருவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. பாஸ்கர், புதுச்சேரி.
02-Jan-2026