வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பயனுள்ள தகவல் ஆச்சி .. மிக்க நன்றிகள்.. எனக்கும் கோலம் போடுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு..
கோலக் கலையை, வெளிநாட்டவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியுள்ள, கனடா நாட்டின் ஒட்டாவாவில் வசிக்கும், சேது ஷான் என்று அழைக்கப்படும், 86 வயது மூதாட்டியான சேதுரத்தினம் சண்முகம்: தமிழகத்தில் வடலுாரில் பல ஆண்டுகள் இருந்தேன். அப்போது, எங்கள் ஊரில் நிறைய கோலம் போடுவேன். கனடா வந்த பின், நம் நாட்டின் கலாசாரத்தை பின்பற்றும் நான், அதை பரப்புவதற்காக, 'ஷேர் மை நாலெட்ஜ்' என்று குழு அமைத்திருக்கிறேன். 'சேது ஷான் மேட் ஈஸி' என்ற யு டியூப் சேனலும் நடத்துகிறேன். நம் ஊர் பாரம்பரிய பலகாரங்கள், 'அரோமா தெரபி' உட்பட பல விஷயங்களை அதில் ஷேர் செய்கிறேன். இங்கு, பல தேசத்தினர் உள்ள குரூப் ஒன்றில் இருக்கிறேன். அதில், ஒவ்வொரு நாட்டின் கலாசாரம் குறித்து ஒவ்வொருவரும் உரை நிகழ்த்த வேண்டும் என்றனர். தென்னிந்திய பாரம்பரிய கோலங்கள் பற்றி பேசினேன். ஆர்வ மிகுதியில் தங்களுக்கு கோலம் போட கற்றுத் தரும்படி ஆண்களும், பெண்களும் கேட்டனர். உற்சாகமாய் கற்றுக் கொடுத்தேன். கனடா மற்றும் அமெரிக்காவின் புகழ் பெற்ற செயின் ஷாப் ஒன்று, ஒட்டாவாவிலும் உள்ளது. அங்கு ஒரு திருவிழா மாதிரி இந்தக் கற்றல் நடந்தது. கோலம் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க, 'டாட் ஆர்ட்' என்ற சொல்லை பயன்படுத்தியதில், அவர்களுக்கு மேலும் சுவாரசியம் கூடிவிட்டது. இந்தியாவில் வாசல் தெளித்து கோலம் போடும் வீடியோக்களை காட்டியபோது, 'அதை எப்படி கை விரல்களால் போட முடிகிறது?' என்று புருவம் உயர்த்தினர். காம்பஸ், ஸ்கேல் என எதுவும் இல்லாமல், நேரடியாக டிசைன் போடுவதை பார்த்து வியந்தனர். கோலத்தால் என்னென்ன நன்மைகள் என்று விவரித்தேன். 'விரல்களுக்கு இது அருமையான பயிற்சி. கைகளுக்கு வலு கிடைக்கும். குனிந்து கோலம் போடுவது நல்ல உடற்பயிற்சி. 'கற்பனா சக்தியை பயன்படுத்துவதால் மூளைக்கும் பயிற்சி. ஒரு சின்ன சாதனை செய்துவிட்டது போல் உற்சாகம் கிடைப்பதால், மனப்பயிற்சி. மனதை ஒருமுகப்படுத்துவதால், 'கான்சென்ட்ரேஷன் போகஸ்' கிடைக்கும்' என்றேன். தற்போது அவர்கள் ஒரு படி மேலே போய், 'நினைவாற்றல் இழப்பு, ஞாபக மறதி போன்ற பிரச்னைகளுக்கும் இது சிகிச்சையாக அமையும்' என்றனர்.முதன் முறையாக பயிற்சி முகாம் நடத்தி முடித்தபோது, 'அடுத்த செஷன் எப்போது' என்று ஆர்வமாய் கேட்டதால், அடுத்தடுத்து ஐந்து முறை நடத்தி விட்டோம். பங்கேற்ற அனைவரும் கோலம் போட்டனர். 'மல்டி கல்சுரல் ஈவென்ட்' அதாவது, பல கலாசார நிகழ்வு என்பதால், கனடா நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டவரும் அதில் பங்கேற்று அசத்தினர்.
பயனுள்ள தகவல் ஆச்சி .. மிக்க நன்றிகள்.. எனக்கும் கோலம் போடுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு..