வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடரட்டும் உங்களுடைய பணி பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் சென்னை அம்பத்தூரிலிருந்து.
இயற்கை விவசாயத்தில் அசத்தும், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் கிராமத்தைச் சேர்ந்த கிரிஜா:கடந்த 2017 முதல் எங்களின் 2.5 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.கொரோனா தொற்று காலத்தில், மக்களிடம் உணவு குறித்த விழிப்புணர்வு அதிகமான போதுதான், இயற்கையான முறையில் நான் விளைவித்த அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.இயற்கை விவசாயத்தை பொறுத்த வரை, ஒருவர், இருவரின் வெற்றி மட்டும் போதாது. அதை ஒரு இயக்கமாக ஆக்கினால் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும்.அதனால், எங்கள் பகுதியில் என்னை போல் ஆங்காங்கே இயற்கை விவசாயம் செய்துட்டு இருந்தவங்களை எல்லாம் நேரில் சந்தித்து பேசி ஒரு குழுவாக ஒன்றிணைத்தேன்.அப்படித்தான், 56 பேர் கொண்ட மத்துார் வட்டார இயற்கை விவசாய நல சங்கத்தை, 2020ல் நிறுவினேன். நான் தலைவியாக பொறுப்பு வகிக்கிற அந்த சங்கத்தில் நான் மட்டுமே பெண். 2022ல் சங்கத்தை பதிவு செய்தோம். ஒவ்வொரு மாதமும் எங்கள் சங்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி, அந்த மாதத்தில் வேளாண்மையில் என்னென்ன செய்ய வேண்டும் என்று பேசுவோம்.பாரம்பரிய நெல் வகைகள், நிலக்கடலை, மஞ்சள், வாழை, காய்கறிகள் என பலவற்றையும் நானும், எங்கள் சங்கத்தில் இருப்போரும் விளைவிக்கிறோம். உரங்களை பொறுத்த வரை, இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். இதனால், மற்றவர்களுக்கு 50 கிலோ நெல் அறுவடை கிடைத்தால், எனக்கு 70 கிலோ வரை நெல் கிடைக்கும்.அதற்காக, இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்த உடனே இந்த ரிசல்ட் கிடைக்காது. நம்முடைய நிலத்தில் என்னவெல்லாம் குறைபாடு இருக்கிறது என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற மாதிரி உரம் போட்டு, இயற்கை முறையில் உழவு செய்தால், அது படிப்படியாக நடக்கும்.கடந்த ஆண்டு, கிருஷ்ணகிரியில் நாங்கள் கொண்டாடிய நெல் திருவிழாவில், 60 பாரம்பரிய நெல் விதைகளை பயன்படுத்தி முளைப்பாரி, 230 நெல் வகைகள், 500 வகையான காய்கறிகள் மற்றும் கிழங்குகளை காட்சிப்படுத்தினோம். காலையில் 200 பேருக்கும், மதியம் 1,200 பேருக்கும் இலவசமாக இயற்கை உணவு வழங்கினோம்.இயற்கை விவசாயம் பற்றிய புரிதலுக்கான பயிற்சிகளை, அரசின் வாயிலாக சுற்றியுள்ள ஊர்களில் வழங்கி வருகிறோம். இயற்கை விவசாயத்தையும், பாரம்பரிய உணவையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்வது, நம் அனைவரின் அடிப்படை கடமை.தொடர்புக்கு: 93444 08351
மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடரட்டும் உங்களுடைய பணி பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் சென்னை அம்பத்தூரிலிருந்து.