உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / இதயம் சீராக இயங்க ஐந்து விஷயங்களை கடைப்பிடியுங்க!

இதயம் சீராக இயங்க ஐந்து விஷயங்களை கடைப்பிடியுங்க!

சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லுாரியின் இதய நோய் நிபுணர், பேராசிரியர் சதானந்தன்: ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது எனில், நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தது போல இருக்கும்; நெஞ்சை அழுத்திப் பிடிக்கும். எந்த வேலையும் செய்ய முடியாது. திடீர் தலைசுற்றல், மயக்கம், அதிக வியர்வை, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். உடனடியாக டாக்டரிடம் சென்று விடுவது நல்லது. ஆனால், பலரும் இந்த அறிகுறிகளை தவறாக புரிந்து கொள்கின்றனர். அல்சர் வலி, வாயுக்கோளாறு என, தாங்களாகவே முடிவு செய்து கொள்கின்றனர். இப்படி தவறாக முடிவு செய்வதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என, வித்தியாசம் இருப்பதில்லை. 'இ.சி.ஜி., - எக்கோ, ட்ரெட்மில்' போன்ற பரிசோதனைகளை செய்தால், இதயத்தில் என்ன பிரச்னை என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.தேவைப்பட்டால், 'எண்டோஸ்கோப்பி' போன்ற சோதனைகளை செய்ய வேண்டும். பெரிய அளவில் நெஞ்சில் வலி வந்தது எனில், மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே, 'ஆஸ்பிரின், குளோபிடாப்' மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, இன்னும் பாதுகாப்பானது.இந்தியாவை பொறுத்தவரை, மாரடைப்புக்கு இரண்டு வகையான சிகிச்சைகளை அளிக்கிறோம்... முதலாவது, 'பார்மக்கோ இன்வேசிவ்' முறை. அதாவது, இ.சி.ஜி., எடுத்து, அதில் தெரியவரும் மாற்றங்களுக்கு ஏற்றபடி, ரத்தக்கட்டை கரைக்கும் சிகிச்சை அளிக்கப்படும். சென்னை போன்ற பெருநகரங்களில், அரை மணி நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று விட்டால், 'பிரைமரி ஆஞ்சியோ ப்ளாஸ்டி' என்ற தெரபி வாயிலாக, எத்தனை ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருக்கின்றன... எது, 'லைப் சேவிங்' என்பதை பார்த்து, பலுான் வைத்து, 'ஓப்பன்' செய்து விடுவர். அதேசமயம், பலதரப்பட்ட அடைப்புகள் இருக்கும் நோயாளிக்கு, 'ஓப்பன் ஹார்ட் சர்ஜரி'யே நல்லது.நமக்கு தேவையானதை மட்டும் சாப்பிட்டு, அடுத்த முறை பசியெடுக்கும் போதும் மட்டும் சாப்பிட்டாலே, உடலுக்கு எந்தப் பிரச்னையும் வராது. இதுதவிர, ஐந்து விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்... புகையிலையை எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது ஒரு மணி நேர உடற்பயிற்சி அவசியம். கடுமையாக எதையும் செய்யத் தேவையில்லை; நடந்தாலே போதுமானது மாவுச் சத்தும், கொழுப்புச் சத்தும் இருக்கும் உணவுகளை தவிர்த்து, நிறைய காய்கறிகள் சாப்பிட வேண்டும் ஏற்கனவே இதய நோய் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளவோ, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நிறுத்தவோ கூடாது தேவைப்படும் போது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை