கடன் வாங்காமல் கடினமாக உழைத்து தொழிலில் வெற்றி பெற்றேன்!
'பேஸ்ட்ரி கேபிட்டல்' என்ற பெயரில் பேக்கரி ஐட்டங்களை, சமூக வலைதளங்களில் விற்பனை செய்து வரும், சென்னை அண்ணா நகரை சேர்ந்த வர்ஷினி: பள்ளி வயதிலேயே பிசினஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால், 'புட் டெக்னாலஜி கோர்ஸ்' கிடைக்காததால், பி.டெக்., பிளாஸ்டிக் டெக்னாலஜி படித்தேன். படிப்பு முடித்திருந்தபோது, கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. அந்தக் காலத்தில் தான், பேக்கரி உணவு வகைகளை வீட்டிலேயே செய்ய ஆரம்பித்தேன். ருசித்த அனைவரும், 'நன்றாக இருக்கிறது' என்று கூறவே, அதையே பிசினசாக துவங்கும் விருப்பமும், நம்பிக்கையும் ஏற்பட்டது. கடந்த 2021ல், 'பேஸ்ட்ரி கேபிட்டல்' என்ற பெயரில் வீட்டிலேயே கேக்குகள் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். முட்டை சேர்க்காத பியூர் வெஜ் கேக், பிரீமியம் குவாலிட்டி ஆகியவைதான் என் கேக்குகளின் சிறப்பம்சம் என்று முடிவு செய்து கொண்டேன். பிசினஸ் ஆரம்பித்த ஐந்தாவது நாளே, 100 பீஸ் கேக் ஆர்டர் கிடைத்தது. சுவை பிடித்து போக, ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பு கிடைத்தது. என் தயாரிப்புகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிடவே , இன்னும் பலரிடம், 'ரீச்' ஆக முடிந்தது. தரத்திற்கே முதலில் முன்னுரிமை என்பதால் , தொழில் நன்றாக, 'பிக்கப்' ஆனது. என் தயாரிப்புகள் அனைத்தையும் வீட்டி லேயே செய்கிறேன். ' கபே'க்களில் தீபாவளி , கிறிஸ்துமஸ் போன்ற விழா காலங்களில் ஏற்பாடு செய்யும், 'சேல்ஸ் ஈவென்ட்' களில் ஸ்டால் அமைத்து , எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வேன்; அதன் வாயிலாகவும் ஆர்டர்கள் கிடைத்து வருகிறது. கடந்தாண்டு தான் அண்ணா நகரிலேயே வேறு இடத்திற்கு தொழிலை மாற்றினேன்; இரண்டு ஊழியர்களை நியமித்தேன். கேக் வகைகளுடன், சத்து மாவு குக்கீஸ், ராகி குக்கீஸ், பீட்சா, மல்டிகிரைன் பிரெட் என்று கார வகைகளையும் அறிமுகப் படுத்தினேன். வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்தும், உணவு டெலிவரி ஆப்கள் வாயிலாகவும் கேக், பன், குக்கீஸ் களை வாங்கிக் கொள்கின்றனர். தற்போது மாதம், 30 ஆர்டர்களுக்கு குறை யாமல் வருகின்றன. தொடர் வாடிக்கையாளர்கள், 700 பேர் உள்ளனர். மாதம், 2.50 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்கிறேன். அடுத்து அண்ணா நகரிலேயே உணவகம் ஒன்றை துவக்கும் முயற்சியில் இருக்கிறேன். கடன் எதுவும் வாங்காமலே, கடினமாக உழைத்து தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறேன். பெரிய ஆர்டர்கள் வரும்போது, தயாரிப்பு முதல் பேக்கிங் வரை கணவரும், அவர் குடும்பத்தினரும் எனக்கு உதவி செய்கின்றனர். தொடர்புக்கு 80723 24607