கைவினை பொருட்கள் செய்வது மன அழுத்தத்தை குறைக்கும்!
பனையோலைகளில் அழகழகான கைவினை பொருட்களை உருவாக்கி வரும், கோவையை சேர்ந்த மோகன வாணி: சிறுவயது முதலே, எனக்கு கைவினை பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். சில ஆண்டுகளுக்கு முன், கன்னியாகுமரிக்கு சென்றிருந்த போது, அங்கே கைவினைக் கலைஞர் ஒருவர் பனையோலை களை கொண்டு, அற்புதமான கலைப் பொருட்கள் தயாரித்து கொண்டிருந்ததை பார்த்தேன். 'நாமும் அதேபோல் அழகு மிகுந்த பொருட் களை உருவாக்க வேண்டும்' என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. பல ஊர்களுக்கும் பயணித்து, பனையோலைகள் வாயிலாக கைவினைப் பொருட்கள் செய்யும் கலையை கற்றுக் கொண்டேன். தற்போது, அழகிய கைப்பை, கூடைகள், பென்சில் பாக்ஸ்கள், விசிறிகள், பறவைகள் மற்றும் விலங்கு பொம்மைகள் உள் ளிட்டவற்றை தயாரிக்க பயிற்சி அளிக்கிறேன். இந்த பயிற்சியை மேற்கொள்ளும் பெண்கள், பனையோலை பொருட்களை உற்பத்தி செய்து, கணிச மான வருவாயும் ஈட்டுகின்றனர். தமிழ கத்திலும், கர்நாடகா மாநிலத்திலும் உள்ள பள்ளிகளுக்கு சென்று , நான் கற்றுக் கொண்ட கலைகளை மற்றவர்களுக்கும் சொல்லித் தருகிறேன். சர்வதேச வாடிக்கை யாளர்களிடமும் கைவினைப் பொருட்கள் வாங்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறேன். பனை தான், தமிழக அரசின் மாநில மரம். இந்த மரத்தின் அடி முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் பயன் மிகுந்தவை. 'கற்பகத்தரு' எனப்படும் பனைமரத்துக்கு பல சிறப்புகள் உள்ளன; அதிக பராமரிப்பு தேவைப் படாத மரம் இது. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் பனையோலை சுவடிகள் வாயிலாகவே நமக்கு கிடைத்திருக்கிறது; பனையோலைகளில் கைவினைப் பொருட்கள் செய்யும் கலை எளிதானது; இது, மன அழுத்தத்தையும் குறைக்கும். இதன் வாயிலாக பனையோலைக்கான தேவை அதிகரிக்கும். பனைமரங்களை வளர்த்து, கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்வது, வாழ்வில் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும்; பாரம்பரியக் கலைகளும் பாதுகாக்கப்படும்!