உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / இசை தான் எங்கள் குடும்பம்!

இசை தான் எங்கள் குடும்பம்!

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், இசைப்பள்ளி நடத்தி வரும் ஸ்ரீவித்யா, தன் இசை குடும்பம் பற்றி கூறுகிறார்: நம் கர்நாடக இசை, கோல்கட்டாவில் ஒலிக்கக் காரணமாக இருப்பது, 'ஸ்ரீ குருகுஹ கான வித்யாலயா' என்ற எங்கள் இசைப் பள்ளி. தன், 80ம் ஆண்டு நிறைவு விழாவை அண்மையில் கொண்டாடினோம். இந்தப் பள்ளியின், 'டீனாக' உள்ள நான், தீட்சிதர் சிஷ்ய பரம்பரையில் வழிவழியாக வந்தவள்.அப்பா, குரு அனந்தராமனிடம் வாய்ப்பாட்டும், அத்தை, குரு சம்பகவல்லியிடம் வயலினும் கற்றேன். பல பெரிய பாடகர்களுக்கு, 8 வயதிலிருந்தே பக்கவாத்தியம் வாசிக்க துவங்கினேன்.எங்கள் குடும்பத்தினர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி முத்துஸ்வாமி தீட்சிதரின் சிஷ்ய பரம்பரையை சேர்ந்தவர்கள்.அம்பி தீட்சிதரின் முக்கிய சிஷ்யர்களில், தாத்தா அனந்த கிருஷ்ணய்யா, டி.கே.பட்டம்மாள், முத்தையா பாகவதர் போன்ற பலர் இருந்தனர்.அம்பி தீட்சிதர், இறைவனடி சேர்ந்த பின், தாத்தாவின் நண்பர், ஜி.வி.ராமனுடன் கோல்கட்டா வந்தார். அவர் என் தாத்தாவை வற்புறுத்தி, கோல்கட்டாவிற்கு புலம் பெயரவைத்தார்.அன்னபூரணி அஷ்டகம், விஸ்வநாத அஷ்டகம் மற்றும் கங்கா தரங்கம் போன்ற ஸ்லோகங்களுக்கு தாத்தா இசையமைத்துள்ளார். 1943 நவம்பர் 23ல் கோல்கட்டா திரும்பி, 'ஸ்ரீ குருகுஹ கான வித்யாலயா'வை நிறுவினார்.எங்கள் தாத்தாவிடம் துவங்கி பின், என் தகப்பனார், என் அத்தை, இப்போது நான் என, வழிவழியாக பல தலைமுறைகளாக இசையை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.தீட்சிதர் கிருதிகளை அட்ஷரம் பிசகாமல், ஸ்வரஸ்தானம் பிறழாமல், தெய்வ சிந்தனையோடு பாடுவது தான் எங்கள் வித்யாலயாவின் சிறப்பு.திருவேதாந்த பாகவதரும், தாத்தா அனந்த கிருஷ்ணய்யரும், தீட்சிதரின் ஓலையில் எழுதப்பட்ட சில அரிய கிருதிகளை, கர்நாடக சங்கீத உலகில் பரப்புவதற்கு மிகவும் உழைத்தனர்.இதனால், நாங்களும் அந்தக் கிருதிகளை கற்கும் பாக்கியம் பெற்றோம். கீர்த்தனைகள் சமஸ்கிருதத்தில் இருப்பதால், அந்த வார்த்தைகளுக்கு, தமிழில் அர்த்தம் சொல்லி, அந்தத் தெய்வம் சார்ந்த கதைகளையும் சொல்வேன்.ஒழுக்கம், வாழ்க்கையின் மதிப்பு, நம் கலாசாரம் பற்றி சொல்லிக் கொடுப்போம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை