உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஜனவரி 1, 1925

செங்கல்பட்டு மாவட்டம், வெம்பாக்கம் என்ற கிராமத்தில், 1925ல் இதே நாளில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன்.இவர், சென்னை பி.எஸ்., உயர்நிலைப் பள்ளி, கிறிஸ்துவ கல்லுாரிகளில் படித்தார். துமிலனின், 'மாலதி' என்ற பத்திரிகையில் உதவிஆசிரியராக சேர்ந்தார். அங்கு சிறுகதை, துணுக்குகள் எழுதினார். 'நகையே உனக்கு நமஸ்காரம்' என்ற நாடகத்தில் நடித்து புகழ் பெற்றார்.இவர் அப்பாவாக நடித்த, வைரமாலை நாடகம்,திரைப்படமான போது, அதிலும் அதே பாத்திரத்தில்நடித்தார். மாலி, வாடிராஜ், நடராஜ், கே.பாலசந்தர்ஆகியோருடன் இணைந்து, 'இந்தியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்' என்ற நாடக கம்பெனியை துவக்கி நாடகங்களை நடத்தினார்.தொடர்ந்து, சங்கே முழங்கு, உரிமைக்குரல்,சவாலே சமாளி, வசந்த மாளிகை, காதலிக்க நேரமில்லை, நெஞ்சிருக்கும் வரை, உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட பல படங்கள் மற்றும் 'டிவி' சீரியல்களிலும் நடித்தார். ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர், 2015, ஜனவரி 24ல் தன் 90வது வயதில் காலமானார்.நாடகம், வெள்ளித்திரை, சின்னத்திரைகளில் அரை நுாற்றாண்டு கோலோச்சிய கலைஞர் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை