உள்ளூர் செய்திகள்

சொல்கிறார்கள்

'அப்பாவின் கனவேஎன் லட்சியம்!'

டாக்டராக வேண்டும் என்பதற்காக, தன் வறுமையை எதிர்த்துப் போராடும் அர்ச்சனா: என் சொந்த ஊர் சேலம் அருகே கரிசல்பட்டி. அப்பா துரைசாமி, டெம்போ டிரைவர். வருமானம் குறைவாக இருந்தாலும், என்னையும், என் தம்பியையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தினமும் சைக்கிளில், என்னையும், தம்பியையும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, 'நீ நல்லா படிச்சு டாக்டராக வேண்டும்' என்று சொல்லிக் கொண்டு வருவார். எங்களின் கஷ்டத்தை உணர்ந்து, நானும் நன்றாகப் படித்தேன்.

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் விரும்பிய பாடம் எடுக்க முடியும் என்று, படித்துக் கொண்டிருந்தேன். தேர்விற்கு ஒரு வாரம் முன்னால் என் அப்பா, மாரடைப்பால் இறந்தார். அப்பாவிற்குப் பின், 'நீ தான் படித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்று என்னைத் தேற்றி, தேர்விற்கு அனுப்பி வைத்தனர்.அந்த தேர்வில், நான் 500க்கு, 468 மதிப்பெண்கள் பெற்றேன். அதன் பின், ஒரு இலவசப் பள்ளியைத் தேடி, பிளஸ் 2 படித்தேன். என் அப்பாவின் கனவு தான் என் லட்சியம். இந்த முறை என் அம்மாவிற்கு மூளையில் கட்டி ஏற்பட்டு, சிரமப்பட்டார். அது குணமாக்கப்பட்டது.

என் படிப்பு மட்டும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. வீட்டிலிருந்த மாடும், வயல் வேலையும் தான் சம்பாத்தியம்.அவ்வப்போது, என் பாட்டியும் வந்து உதவி செய்வார். பிளஸ் 2வில் கடுமையாக படிக்க ஆரம்பித்தேன். பொதுத்தேர்வில், 1,150 மதிப்பெண்களும், மருத்துவ கட் -ஆப் 195.75 எடுத்தேன். அரசு ஒதுக்கீட்டில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தது. அரசுக் கல்லூரியைவிட இங்கு, ஆண்டுக் கட்டணம் அதிகம்.இந்த முறை மாட்டை விற்று, நிலத்தை அடமானம் வைத்து பணம் கட்டினோம். அடுத்த முறை என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை