உள்ளூர் செய்திகள்

சொல்கிறார்கள்

'கனவுக்காக வாழ்கிறேன்...!'தமிழக கால்பந்து வீரர் மோகன்ராஜ்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் கிராமம் என் சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு, கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வத்திற்கு தோள் கொடுத்தவர் என் மாமா. முதலில் தெருவோரத்தில் என் விளையாட்டை துவங்கினேன். பின், மதுரையில் தமிழக விளையாட்டு ஆணையத்தில் நடந்த கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கான உடற்தேர்வில் தேறினேன்.கடந்த 2007ல் ஜூனியர் இந்தியா டீம் கேப்டனாக தேர்வானேன்.

மாநில, மாவட்ட அளவில் நடந்த எந்த போட்டியிலும் ஜெயிக்காமல் நேரடியாக இந்திய டீமில் தேர்வானது அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சில கிளப்களில் விளையாடிய பின், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.இந்தியா உலகக் கோப்பைக்கு போகாததுக்கு காரணம், கடந்த 10 வருடத்திற்கு முன், அரசு வேலையில் இட ஒதுக்கீட்டை நிறுத்தியது.

சில நாட்களுக்கு முன், போர்ச்சுக்கலில் இருக்கும் ஸ்போர்டிங் லிஸ்பெர்க் விளையாட்டுப் பயிற்சி மையத்துக்கு சென்றேன். அங்கு குழந்தைகளை மூன்று வயதிலேயே பயிற்சி மையத்தில் விட்டுவிடுகின்றனர்; இது, பத்து வயதில் கால்பந்தின் அனைத்து நுணுக்கங்களும் தெரிய வாய்ப்பாக அமைந்து விடுகிறது. ஆனால், எனக்கு இருபத்து மூன்று வயதில் இந்த வாய்ப்பு கிடைத்தது.நம் ஊர்களில், 90 சதவீத பள்ளிகளில் மைதானம் இல்லை.

கால்பந்து ஏழைகளுக்கான விளையாட்டு. ஒரு பந்தும், ஷூவும் இருந்தால் விளையாடலாம். கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், கால்பந்துக்கு கொடுத்தால் நாம் எங்கேயோ போகலாம். கால்பந்து விளையாட்டில் வாய்ப்புகள், சலுகைகளை அரசு அதிகப்படுத்தணும். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆடுவது தான் என் கனவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை