உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / டர்ன் ஓவரை ரூ.100 கோடியாக உயர்த்தணும்!

டர்ன் ஓவரை ரூ.100 கோடியாக உயர்த்தணும்!

துணிச்சல் இருந்தால் பிசினசில் ஜெயிக்கலாம் என்று கூறும், 'எட்டர்னா பில்டிங் ஆட்டோமேஷன் பிரைவேட் லிமிடெட்' நிர்வாக இயக்குனர் காலித் முகமத்: சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மரைக்காயர் பட்டினம். 2001ல் சென்னை பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்தவுடன், துபாய்க்கு வேலை தேடி போனேன்.அங்கு, நகை கடையில் மார்க்கெட்டிங்கில் இருந்தேன். 2008ல் துபாயில் பொருளாதார ரீதியாக சுணக்கம் ஏற்பட்டது.எனவே, பெரிய ஜுவல்லர்சிடம் இருந்து நகை வாங்கி, தனிப்பட்ட நபர்களுக்கு விற்கலாம் என்று யோசித்து, சொந்தமாக பிசினஸ் துவங்கினேன். இந்த வேலையை சூப்பராக செய்ததால், நல்ல லாபம் கிடைத்தது.ஆனால், என்னை போல் வைரத்தை கொண்டு சென்ற ஒருவர், ஒரு பெரிய ஹோட்டலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அந்த செய்தி என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அப்போது தான் திருமணமாகி, ஒரு குழந்தையும் பிறந்திருந்தது. அதனால், அந்த தொழிலை விட்டு விட்டு, குடும்பத்துடன் சென்னை வந்து விட்டேன்.'சேப்டி கேட்ஜெட்' என்று சொல்லப்படும் 'சிசிடிவி' கேமராக்களை இறக்குமதி செய்து சென்னையில் விற்க முடிவெடுத்து, 'எட்டர்னா' என்ற இந்த கம்பெனியை துவங்கினேன்.சீனாவுக்கு சென்று, அங்கு தயார் செய்யப்படும் கேமராக்களை, 'எட்டர்னா பில்டிங் ஆட்டோமேஷன்' என்ற பெயரில் பிராண்டிங் செய்து, இங்கு விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.ஆந்திராவில் உள்ள ஸ்ரீசிட்டியில் முதல் பெரிய ஆர்டர் கிடைத்தது.இன்று, 'சாம்சங், பெப்சி பிளான்ட், போர்டு' உட்பட பல முக்கிய கம்பெனிகளின் சேப்டி கேட்ஜெட்களை அமைத்து, அதற்கான சர்வீசை தொடர்ந்து அளித்து வருகிறேன்.கேமரா தொழில்நுட்பத்தில் சீனாவில் கிடைக்கும் அதிநவீன வசதிகளுடன், வேறு சில சாப்ட்வேர்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக, புதிய புராடக்டுகளை உருவாக்கும் வேலையை நாங்கள் செய்ததால், பல புதுமையான தீர்வுகளை எங்களால் தர முடிந்தது. கொரோனா வந்த போது, கேமரா வாயிலாக உடல் வெப்பத்தை கண்டறிந்து சொல்லும்படியான கேமராவை கொண்டு வந்தோம். தொழிற்சாலைக்கு இது மிகவும் உதவியாக இருந்தது.தற்போது, சென்னையிலும், ஸ்ரீசிட்டியிலும் இரு கிளைகள் உள்ளன. 2028க்குள் இதை 10 கிளைகளாக உயர்த்த வேண்டும். முழு நேரமாக 13 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.இந்த எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க வேண்டும். 5 கோடியாக உள்ள, 'டர்ன் ஓவரை' 100 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்துடன் கடுமையாக உழைக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை