/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; தொழிற்சாலை கழிவுகளை ஏரியில் குவித்து அட்டூழியம்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; தொழிற்சாலை கழிவுகளை ஏரியில் குவித்து அட்டூழியம்
தொழிற்சாலை கழிவுகளை ஏரியில் குவித்து அட்டூழியம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிலாவட்டம் ஊராட்சியில், ஒழப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் உள்ளேயும் மற்றும் கரையோரம், சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளை, மூட்டை மூட்டையாக கட்டி கொண்டு வந்து, மர்ம நபர்கள் கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளை சிலர் தீ வைத்து எரிப்பதால், அதிலிருந்து வெளியேறும் கரும் புகைவெளியேறி, சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், இருமல், கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.இதனால் பொதுமக்கள் பாதிப்படைவதோடு, வனத்துறை பராமரிப்பில் உள்ள மரங்களும் எரிந்து வீணாகின்றன. எனவே,இங்கு தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும்.-எஸ்.சுரேஷ்,ஒழுப்பாக்கம்.