உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; பவுஞ்சூர் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பவுஞ்சூர் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்

பவுஞ்சூர் பஜார் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம், வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.மேலும் பஜார் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.பச்சம்பாக்கம், திருவாதுார், பவுஞ்சூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர்களுக்கு செல்ல, பவுஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.இந்த பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.பயணியர் நலன் கருதி, பவுஞ்சூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அ.வேல்முருகன்,செய்யூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ