உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு:புகார் பெட்டி;நின்னை காட்டூர் பகுதியில் அபாய நிலையில் மின்சாதன பெட்டி

செங்கல்பட்டு:புகார் பெட்டி;நின்னை காட்டூர் பகுதியில் அபாய நிலையில் மின்சாதன பெட்டி

அபாய நிலையில் மின்சாதன பெட்டி

மறைமலை நகர் நகராட்சி நின்னை காட்டூர் பகுதியில், கிழக்கு பொத்தேரி - ரயில் நகர் செல்லும் சாலையில் நகராட்சி சார்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த விளக்களுக்கான 'ஸ்விச் ' மற்றும் மீட்டர் இந்த சாலை சந்திப்பில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள மின் மன கம்பத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் பெட்டி திறந்த நிலையில் குறைந்த உயரத்தில் பள்ளி மாணவர்கள் கைகளில் எட்டும் வகையில் உள்ளது . இதற்கு பாதுகாப்பாக கதவு அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.பிரகாஷ், மறைமலை நகர்.

மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்

சித்தாமூர் அருகே பூங்குணம் கிராமத்தில் மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலையின் சந்திப்பு உள்ளது.சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி கிராம மக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.சாலை சந்திப்பு இரவு நேரத்தில் போதைய வெளிச்சம் இன்றி இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை சந்திப்பில் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது.துறை சார்ந்த அதிகாரிகள் சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ம.தினகரன், செய்யூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி