செங்கல்பட்டு: புகார் பெட்டி; பள்ளி அருகே வேகத்தடை அவசியம்
பள்ளி அருகே வேகத்தடை அவசியம்
திருப்போரூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 1,000க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை ஒட்டி அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், இச்சாலையில், வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்கபடவில்லை. வேகமாக செல்லும் வாகனங்களால், மாணவர்கள் சாலையைக் கடப்பதற்கு அச்சப்படுகின்றனர். பள்ளி எதிரே வேகத்தடை அமைத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.- எம். குமார், திருப்போரூர்.