/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி ; மேம்பாலத்தின் அடிப்பகுதி குப்பை கிடங்கான அவலம்
செங்கல்பட்டு: புகார் பெட்டி ; மேம்பாலத்தின் அடிப்பகுதி குப்பை கிடங்கான அவலம்
மேம்பாலத்தின் அடிப்பகுதி குப்பை கிடங்கான அவலம்
வண்டலுார் ரயில் நிலையம் அருகே, மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில், மூன்றடி உயரத்திற்கு, சுற்றிலும் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.இந்த இரும்பு தடுப்புக்குள், மெல்ல மெல்ல குப்பை சேர்ந்து, தற்போது, 'மினி' குப்பை மேடு உருவாகி வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.இரும்பு தடுப்பு உள்ளதால், ஊராட்சி துாய்மை பணியாளர்களும் உள்ளே சென்று, குப்பையை அப்புறப்படுத்த முடியவில்லை.எனவே, உள்ளே சென்று குப்பையை சேகரித்து அப்புறப்படுத்த, அங்கு நுழைவு வாயில் அமைக்க வேண்டும்.- எம்.ரபீக் அகமது,வண்டலுார்.