/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; சித்தாற்காடில் வடிகால்வாய் வசதி வருமா?
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சித்தாற்காடில் வடிகால்வாய் வசதி வருமா?
சித்தாற்காடில் வடிகால்வாய் வசதி வருமா?
செ ய்யூர் அருகே சித்தாற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பாளையூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கையம்மன் கோவில் தெருவில் வடிகால்வாய் வசதி இல்லாததால், குழாய்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையோரத்தில் தேங்குகிறது. மேலும், சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது, கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி, இரவு நேரத்தில் கொசுக்கடியால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க, கெங்கையம்மன் கோவில் தெருவில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - சு.சங்கீதா, சித்தாற்காடு.