உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி ; சாலை பணிகள் பாதிப்பு அதிகாரிகள் கவனிப்பரா?

செங்கல்பட்டு: புகார் பெட்டி ; சாலை பணிகள் பாதிப்பு அதிகாரிகள் கவனிப்பரா?

சாலை பணிகள் பாதிப்பு அதிகாரிகள் கவனிப்பரா?

திருப்போரூர் அடுத்த குண்ணப்பட்டு ஊராட்சி, ஈ.வெ.ரா., தெருவில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவரவர் பட்டா இடத்தை, சாலை பயன்பாட்டிற்கு வழங்கியதால், தற்போது புதிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதி 30 அடி சாலை அமைக்க வேண்டியுள்ள நிலையில், இங்கு எதிரெதிரே வசிக்கும் இரு வீட்டார் மட்டும், சாலைக்கு இடம் வழங்கவில்லை.இதனால் அங்கு 30 அடி சாலை அமைக்க முடியவில்லை. அத்துடன், மற்ற சாலையுடன் இணைக்க முடியாமல் உள்ளது.இதன் காரணமாக, இத்தெருவில் வசிக்கும் பள்ளி மாணவர்கள், பல்வேறு தேவைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.மேலும், சமீபத்தில் இத்தெருவில் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வர வழியில்லாமல், மாற்று வழியில் சுற்றிக்கொண்டு வந்து, கர்ப்பிணி ஒருவரை ஏற்றிச் சென்றது.எனவே, இத்தெருவில் வசிக்கும் மக்கள் நலன் கருதி, மேற்கண்ட இரு வீட்டாரிடம் மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தி, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-என்.ராமன், குண்ணப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ