/   புகார் பெட்டி    /  செங்கல்பட்டு  /   செங்கல்பட்டு: புகார் பெட்டி; கான்கிரீட் சாலை சேதம் புதிதாக அமைக்கப்படுமா?                      
செங்கல்பட்டு: புகார் பெட்டி; கான்கிரீட் சாலை சேதம் புதிதாக அமைக்கப்படுமா?
கான்கிரீட் சாலை சேதம் புதிதாக அமைக்கப்படுமா?
சித்தாமூர் அடுத்த நெற்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவிளம்பாக்கம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை சேதமடைந்து, அப்பகுதி சகதியாக மாறியுள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் உட்பட, அனைவரும் சிரமப் படுகின்றனர். ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய கான்கிரீட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - இ.குகன், சித்தாமூர்.