/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி;சமுதாய நலக்கூடம் ஆப்பூரில் அமைக்கப்படுமா?
செங்கல்பட்டு: புகார் பெட்டி;சமுதாய நலக்கூடம் ஆப்பூரில் அமைக்கப்படுமா?
சமுதாய நலக்கூடம் ஆப்பூரில் அமைக்கப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆப்பூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அப்பகுதி மக்கள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை, சிங்கபெருமாள் கோவில், வல்லக்கோட்டை, மறைமலை நகர் பகுதி தனியார் திருமண மண்டபங்களில், அதிக வாடகைக்கு நடத்தும் சூழ்நிலை உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, புதிய சமுதாய நலக்கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.