புகார் பெட்டி: சாலையில் பெரிய பள்ளங்கள் சீரமைப்பது எப்போது?
திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில், அந்திராபுரம் பகுதியிலிருந்து தண்டரை கிராமத்திற்குச் செல்லும் 6 கி.மீ., சாலை உள்ளது. இச்சாலை வழியாக பெரிய இரும்பேடு, சின்ன இரும்பேடு உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்கு சென்று வருகின்றனர். இச்சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, மழைநீர் தேங்கி உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.சரவணன், தண்டரை கிராமம்.