சேதமான மின்கம்பத்தால் பெருக்கரணையில் அபாயம்
சித்தாமூர் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் இருந்து புதுார் வழியாக, பழவூர் செல்லும் சாலை உள்ளது. இங்குள்ள ஏரிக்கரை அருகே சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில், கான்கிரீட் பூச்சு உதிர்ந்து காணப்படுகிறது. இதனால், நாளடைவில் மின்கம்பம் சாலையில் சாய்ந்து, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - அ.ராஜ், சித்தாமூர்.